லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 4% DA ஹைக், ஜாக்பாட் சம்பள உயர்வு

7th Pay Commission DA Hike 2024 : தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, , மத்திய ஊழியர்களின் நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வுடன், வீட்டு வாடகை கொடுப்பனவும் 3 சதவீதம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 2, 2024, 09:40 AM IST
  • ஹோலி பாண்டிக்கைக்கு முன்னதாக புதிய டிஏ விகிதம்
  • 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு நிச்சயம்.
  • அகவிலைப்படி மதிப்பெண் 50.28 சதவீதத்தை எட்டியுள்ளது.
லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 4% DA ஹைக், ஜாக்பாட் சம்பள உயர்வு title=

மத்திய ஊழியர்களின் டிஏ உயர்வு 2024: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தற்போது இவர்களின் அகவிலைப்படி மீண்டும் ஒரு முறை உயரப்போகிறது. இது தொடர்பாக தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தகவல் ஒன்றில், டிசம்பர் மாதத்திற்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு வெளியானப்பிறகு, ஜனவரி 2024 முதல் டிஏ 4 சதவீதம் அதிகரிக்கப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இது தொடர்பாக எவ்வித அதிகாரபூர்வ அறிக்கை அல்லது தகவல் வெளியிடப்படவில்லை, இருப்பினும் மார்ச் மாதம் அதாவது ஹோலி பாண்டிக்கைக்கு முன்னதாக புதிய டிஏ விகிதங்களை மத்திய அரசால் வெளியிடப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு நிச்சயம்:
பொதுவாக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண (DA - DR Hike) விகிதங்கள் ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் தான் கணக்கிடப்படுகிறது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய அரசால் ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதம் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டைப் பொறுத்தவரை, இந்த DA உயர்வானது (4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை) இரண்டு முறை உயர்த்தப்பட்டது. அந்தவகையில் தற்போது இந்த ஆண்டு அகவிலைப்படியின் முதல் அதிகரிப்பு ஹோலி பண்டிகைக்கு முன் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த உயர்வு ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான AICPI குறியீட்டுத் தரவைப் பொறுத்தே செய்யப்படும்.

மேலும் படிக்க | Paytm FASTagல் இருக்கும் இருப்பைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்! விளக்கம் சொல்லும் பேடிஎம்!

இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவில் {All India Consumer Price Index (AICPI)} இந்த எண்ணிக்கை 0.3 புள்ளிகள் குறைந்து 138.8 புள்ளிகளாக இருந்தது. ஆனால் அகவிலைப்படி மதிப்பெண் 50.28 சதவீதத்தை எட்டியுள்ளது, இதன் மூலம் அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்வு வழங்கப்படுவது உறுதி என்று கணக்கிடப்பட்டுள்ளது, அதன்படி ஜனவரி மாதம் 50 சதவீதம் அகவிலைப்படி செலுத்த வேண்டியிருக்கும்.

எடுத்துக்காட்டாக, அடிப்படை சம்பளம் ரூ. 18 ஆயிரம் ஆக இருந்து, டிஏ 46 சதவீதம் வைத்தால், அதன்படி அகவிலைப்படி ஃபார்முலாவின் படி, (46 x 18000) / 100 ஆகும். இது போன்று தான் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியும் கணக்கிடப்படுகிறது. 

மார்ச்சில் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் என்று யூகிக்கப்படுகிறது:
இந்நிலையில் தற்போதைக்கு, ​​மத்திய ஊழியர்கள் (Central Government Employees) 46 சதவீதம் அகவிலைப்படியின் பலனைப் பெற்று வருகின்றனர். ஜனவரி மாதம் முதல் மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு ஏற்பட்டால் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசின் ஒப்புதலுக்குப் பிறகுதான் ஊழியர்களுக்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்குப் பிறகு அகவிலைப்படி கணக்கீடு 0. முதல் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் டிஏ சேர்க்கப்படும். ஒரு ஊழியரின் ஊதியக் குழுவின்படி குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 18000 ரூபாயாக இருந்தால், 9000 ரூபாயில் 50 சதவிகிதம் அவருடைய சம்பளத்துடன் சேர்க்கப்படும். இதன் மூலம் 48 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.

மேலும் படிக்க | EPFO Update: EPS உறுப்பினர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய சுற்றறிக்கை: வெளியான வழிகாட்டுதல்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News