ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்
Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஹை அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுமட்டுமின்றி எச்சரிக்கையுடன் அரசு அவர்களுக்கு 2 அற்புதமானபரிசுகளையும் அளித்துள்ளது.
Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஹை அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுமட்டுமின்றி எச்சரிக்கையுடன் அரசு அவர்களுக்கு 2 அற்புதமானபரிசுகளையும் அளித்துள்ளது. குறிப்பாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான செயல்முறையை எளிமைப்படுத்தவும் பாதுகாப்பானதாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் இவற்றை பற்றி விரிவாக காணலாம்.
Life Certificate: வாழ்க்கைச் சான்றிதழுக்கான விதிமுறைகள் மற்றும் தேதிகள்
- 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 முதல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி வழங்கப்படுகிறது.
- 80 வயதுக்குட்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு, இந்த வசதி நவம்பர் 1 முதல் தொடங்குகிறது.
- ஓய்வூதியம் பெறுவோர் மாதா மாதம் தவறாமல் ஓய்வூதியம் பெற, ஆண்டுக்கு ஒருமுறை வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
- இப்போது, முக அங்கீகார அமைப்பு (Face Authentication) மூலம் இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே எளிதாக செய்யலாம்.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, கவனமாக இல்லாவிட்டால், சைபர் குற்றவாளிகளிடம் சிக்கி மோசடிக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக அரசு எச்சரித்துள்ளது.
சைபர் குற்றவாளிகள் கையாளும் புதிய முறைகள்: எச்சரிக்கை அவசியம்
சைபர் குற்றவாளிகள் ஓய்வூதியதாரர்களை அழைத்து வாழ்க்கைச் சான்றிதழை புதுப்பிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்றனர். PPO எண், ஆதார் அட்டை எண், மாதாந்திர ஓய்வூதியத் தொகை மற்றும் நாமினியாக பரிந்துரைக்கப்பட்டவர்களின் தகவல் போன்ற ஓய்வூதியதாரர்களின் முழுமையான தரவுகளை அவர்கள் பெற்று விடுகிறார்கள். அதன் பின் இந்த குற்றவாளிகள் ஓய்வூதியம் பெறுவோரை தொலைபேசியில் OTP ஐப் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள்.
ஓய்வூதியதாரர் OTP-ஐப் பகிர்ந்து கொண்டவுடன், குற்றவாளிகள் அவர்களது வங்கிக் கணக்கை அணுகி, முழு கணக்குத் தொகையையும் போலி கணக்குகளுக்கு மாற்றிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட சைபர் குற்றவாளிகளிடம் ஓய்வூதியதாரர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஓய்வூதிய இயக்குநரகம் தொலைபேசி மூலம் வாழ்க்கைச் சான்றிதழைப் புதுப்பிப்பது பற்றி எப்போதும் தொடர்புகொள்வதில்லை என்பதை ஒய்வூதியம் பெறுவோர் நினைவில் கொள்ளவேண்டும்.
மேலும் படிக்க | காப்பீட்டில் சிக்கல் வரமால் இருக்க இந்த விஷயத்தை நோட் பண்ணுங்க!!
Central Government: மத்திய அரசு அளித்துள்ள புதிய வசதிகள்
1. நோய்வாய்ப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு டோர் ஸ்டெப் சேவை (Door Step Service)
நோய்வாய்ப்பட்டு வங்கிக்கு செல்ல முடியாத ஓய்வூதியதாரர்களுக்கு, வங்கி ஊழியர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்ப அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் எங்கும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில், இந்த ஊழியர்கள் வீட்டிற்கே வந்து வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கும் செயல்முறையை செய்து முடிக்க உதவி செய்வார்கள்.
2. முக அங்கீகார தொழில்நுட்பம் (Face Authentication)
அரசாங்கம் UIDAI உடன் இணைந்து முக அங்கீகார தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் அனைத்து விதமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் மூலமாகவும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதற்கு "ஜீவன் பிரமான் செயலி" (Jeevan Praman App) மற்றும் பிற டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்தலாம்.
விழிப்புணர்வு பிரச்சாரம்
நவம்பர் 2023 இல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிற ஓய்வூதியர்களின் அமைப்புகளுடன் இணைந்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை 48 நகரங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. இந்த பிரச்சாரத்தின் கீழ், 70.8 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களில் சுமார் 55 லட்சம் பேர் டிஜிட்டல் லைஃப் சான்றிதழை வெற்றிகரமாக பயன்படுத்தினர்.
Pensioners: முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
- அறியப்படாத நபர்கள் மூலம் செய்யப்படும் அழைப்புகளில் உங்கள் தனிப்பட்ட தகவல் அல்லது OTP ஐப் பகிர வேண்டாம்.
- ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் அல்லது வங்கியை மட்டுமே பயன்படுத்தவும்.
- ஓய்வூதிய இயக்குநரகம் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும், அரசாங்க இணையதளத்தை மட்டுமே பார்வையிடவும்.
மேலும் படிக்க | CGHS: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு AB PM-JAY குறித்த முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ