CGHS: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு AB PM-JAY குறித்த முக்கிய அப்டேட்

CGHS New Rules For Central Government Employees: CGHS அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) PM-JAY நன்மைகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஆனால், வேறு அரசாங்க சுகாதார திட்டத்திலிருந்தும் பயனடைபவர்கள் AB PM-JAY திட்டத்தின் கீழ் கவர் செய்யப்பட மாட்டார்கள் என்பதை விதிகள் தெளிவுபடுத்துகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 23, 2024, 03:44 PM IST
  • CGHS அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தில் நன்மைகளை பெற விண்ணப்பிக்க முடியுமா?
  • மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் PMJAY திட்டத்திற்கான தகுதி அளவுகோள்கள் என்ன?
  • பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்.
CGHS: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு AB PM-JAY குறித்த முக்கிய அப்டேட் title=

CGHS New Rules For Central Government Employees: மோடி அரசாங்கம் சமீபத்தில் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) பலன்களை 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு நீட்டித்தது. இது மூத்த குடிமக்கள் பலருக்கு பெரும் நிவாரணமாக வந்துள்ளது. மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு நலத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் பயனாளிகளுக்கு கூடுதல் விருப்பமாக முதன்மைத் திட்டத்தை அரசாங்கம் வழங்கியது.

CGHS அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தில் நன்மைகளை பெற விண்ணப்பிக்க முடியுமா?

CGHS அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) PM-JAY நன்மைகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஆனால், வேறு அரசாங்க சுகாதார திட்டத்திலிருந்தும் பயனடைபவர்கள் AB PM-JAY திட்டத்தின் கீழ் கவர் செய்யப்பட மாட்டார்கள் என்பதை விதிகள் தெளிவுபடுத்துகின்றன.

PM-JAY பற்றிய சமீபத்திய அறிவிப்பு, CGHS மற்றும் ECHS போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து தற்போது பயனடையும் மூத்த குடிமக்கள், தங்களின் தற்போதைய திட்டம் அல்லது புதிய AB PM-JAY ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டது. இருப்பினும், தனியார் உடல்நலக் காப்பீட்டைக் கொண்ட மூத்தவர்கள் அல்லது ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் (ESIS) கீழ் உள்ளவர்கள் AB PM-JAY நன்மைகளுக்குத் தகுதி பெறுவார்கள்.

மேலும் படிக்க | மத்திய அரசின் 25 லட்சம் ரூபாய் தொழில் கடன், 35% மானியம் பெறுவது எப்படி?

CGHS Cardholders: CGHS இலிருந்து AB PM-JAY க்கு மாறுவது ஒரு முறை செயல்பாடு

CGHS இலிருந்து AB PM-JAY க்கு மாறுவது என்பது 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஒரு முறை செயல்பாடாகும். இதற்கான முடிவை ஒரு முறை எடுத்துவிட்டால், அதிலிருந்து மாற முடியாது. அதாவது, 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் AB PM-JAY திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, தற்போதுள்ள CGHS கார்டு அல்லது அரசாங்க மருத்துவக் காப்பீட்டை ஒப்படைத்தால், அவர்கள் மீண்டும் மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த முடிவு ஒரு முறை, மாற்ற முடியாத விருப்பமாக இருக்கும்.

மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் PMJAY திட்டம்: இதற்கான தகுதி அளவுகோள்கள் என்ன?

- 70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களும், அவர்களது பொருளாதார நிலை எப்படி இருந்தாலும், ஆயுஷ்மான் பாரத் PMJAY திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சைக்கு தகுதியுடையவர்கள். 
- இந்தியாவில் உள்ள சுமார் 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 6 கோடி மூத்த குடிமக்களுக்கு உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதை இந்த முயற்சி இலக்காகக் கொண்டுள்ளது. 
- பயனாளிகளின் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி வயது இருக்க வேண்டும் என்பது மட்டுமே இதற்கான தகுதிக்கான அளவுகோல்.
- இதனால் மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் நேரடி பலன்களை பெற முடியும்.

Aadhaar Based e KYC: பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்

தகுதியான மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) ஆயுஷ்மான் கார்டுகளை பதிவு செய்வதற்கும் வழங்குவதற்கும் ஆதார் அடிப்படையிலான e-KYC கட்டாயமாகும். ஆதார் இந்தச் செயல்முறைக்குத் தேவையான ஒரே ஆவணமாக உள்ளது. இது திட்டத்திற்கான அணுகலை எளிதாக்குகிறது. ஆதாரில் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில், பதிவுசெய்யப்பட்ட பிறந்த ஆண்டைத் தொடர்ந்து வரும் ஜனவரி 1 ஆம் தேதி, தகுதி நோக்கங்களுக்காக தனிநபரின் பிறந்த தேதியாகக் கருதப்படும்.

மேலும் படிக்க | EPFO முக்கிய அப்டேட்: ஆதார் OTP மூலம் EPFO UAN -ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News