மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல்.  அதன் விலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சில மாநிலங்களில் அதன் விலை ₹100 என்ற அளவை தாண்டிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி நிர்ணயிக்கப்படுகின்றன. சர்வதேச நிலையில், கச்சா எண்ணெய் விற்கப்படும் விலைக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல்  (Petrol, Diesel Price) விலைகள் தினமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.


பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் டெல்லியில் ரூ .95.03 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை தலைநகரில் லிட்டருக்கு ரூ .85.95 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல், லிட்டருக்கு முறையே ரூ .94.76 மற்றும் ரூ .85.66 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டன.


மும்பையில் பெட்ரோல் விலை ₹100 என்ற அளவை தாண்டி விட்டது. ஜூன் 6 ஆம் தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .101.25 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ .93.30 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒரு நாள் முன்பாக, பெட்ரோல் மற்றும் டீசல், முறையே ரூ .100.98 மற்றும் ரூ .92.99  என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டன. 


சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 96.47 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 90.66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


ALSO READ | இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்


மும்பையைத் தவிர, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, லே, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ .100 ஐ தாண்டியுள்ளது.


மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ .103.17 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.50  ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல், ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .101.59 என்ற அளவில் விற்கப்படுகிறது.


ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் பெட்ரோல் விலை உச்சத்தில் உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .105.33 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால், பெட்ரோல் விலை 110 ரூபாயைத் தொட்டு விடும் என கூறப்படுகிறது.


ரூ .100 க்கு மேல் பெட்ரோல் விற்பனை செய்யும் மற்ற நகரங்களில் ஆந்திராவின் விசாகபட்டினம் மற்றும் தெலுங்கானாவின் ஆதிலாபாத் ஆகியவை அடங்கும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக வாட்  வரி வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR