இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த படியே ஆயிரக்கணக்கில் பணத்தை ஈட்ட ஒரு அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கு உங்களிடம் பழைய 1 ரூபாய் நோட்டு இருந்தால், போதும். 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 14, 2021, 09:59 PM IST
  • கொரோனா காலத்தில் நீங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம்
  • உங்களிடம் குறிப்பிட்ட பழைய 1 ரூபாய் நோட்டு இருந்தால் போதும்.
  • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

புதுடெல்லி: அதிகம் கஷ்டப்படாமல் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு தான். பணம் சம்பாதிப்பது எப்படி என்பது எளிதானது அல்ல,  என்பது அனைவரும் அறிந்ததே.  ஒருபோதும் பணக்காரராக குறுக்குவழிகளை கடைபிடிக்க கூடாது. நேரான வழியில் பணம் ஈட்டுவது தான் நிலைத்து நிற்கும். 

இருப்பினும், புத்திசாலித்தனத்துடன், அதிர்ஷ்டமும் சேர்ந்தால், குறைந்த நேரத்தில் பணக்காரர்களாக ஆகலாம். உதாரணமாக, உங்களிடம்  இந்த குறிப்பிட்ட 1 ரூபாய் நோட்டு இருந்தால், அதன் மூலம் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம்..

உங்களை பணக்காரர் ஆக்கும் 1 ரூபாய் நோட்டு 

மேலும் 1 ரூபாய் நோட்டினால்  ஒருவர் எவ்வாறு பணக்காரர் ஆக முடியும் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம்! இந்திய அரசு 1 ரூபாய் நோட்டை அச்சிடுவதை  நிறுத்தி விட்ட நிலையில், உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்க கூடும். ஆனால், பழைய ரூபாய் நோட்டுகள், கிடைப்பதற்கு அரிய நோட்டுக்களை வாங்க பலர் காத்திருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் கொரோனா வைரஸ் காலத்தில், நீங்கள் வீட்டிலிருந்து சம்பாதிப்பதற்கான சிறந்த வழி இது. 

ALSO READ | WhatsApp தனியுரிமை கொள்கையை ஏற்கவில்லை என்றால், கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்படுமா

 

1 ரூபாய் நோட்டு கொடுத்தால் 45 ஆயிரம் ரூபாயைப் கிடைக்கும்

பழைய மற்றும் அரிதான ரூபாய் நோட்டுகள் நாணயம் பஜார் (Coin Bazzar) என்ற இணையதளத்தில் வாங்கி விற்கப்படுகின்றன. சமீபத்தில், இந்த இணையதளத்தில் 1 ரூபாய் நோட்டுடன் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, உங்களிடம் உள்ள பழைய 1 ரூபாய் நோட்டு இருந்தால், அது அவர்கள் எதிர்ப்பார்க்கும் ரூபாய் நோட்டாக இருந்து, நிபந்தனையை பூர்த்தி செய்தால், அதற்கு பதிலாக  உங்களுக்கு 45 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். உங்களீடம் பழைய ரூபாய் நோட்டு இருந்தால், அல்லது உங்கள் வீட்டு பெரியவர்களிடம் இருந்தால், அதை இன்றே தேடி பார்த்து எடுக்கவும்

மிகவும் அரிதான நோட்டு என்றால், மேலும் அதிக பணம் கிடைக்கும்

இந்த இணையதளத்தில், 1 ரூபாயின் அரிய நோட்டுக்கான விளம்பரத்தில் சில நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. 1 ரூபாய் நோட்டுடன் 1957  ஆம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் முதன்மை செயலாளராக இருந்த எச்.எம். படேல் (H.M.Patel) கையெழுத்திட்ட நோட்டு என்றால் இருந்தால், இன்றே அந்த தளத்திற்கு சென்று விற்பனை செய்யலாம். இருப்பினும், அதன் வரிசை எண் 126345 என இருப்பது கட்டாயமாகும். உங்களிடம் அத்தகைய 1 ரூபாய் நோட்டு இருந்தால், அதை இந்த இணையதளத்தில் விற்க தாமதிக்க வேண்டாம்.

ALSO READ | இந்தியாவில் விரைவில் 5G தொழில்நுட்பம்; ஆனால், சீனாவுக்கு ஏமாற்றம்
 

More Stories

Trending News