EPFO இண்டரெஸ்ட் கிரெடிட் தேதி: EPFO ​​ஊழியர்களுக்கு மத்திய அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. அதன்படி PF வட்டி பணம் விரைவில் உங்கள் கணக்கில் கிரெடிட் செய்யப்படும். 2022ஆம் நிதியாண்டுக்கான வட்டிப் பணம் உங்கள் கணக்கில் வரத் தொடங்கிவிட்டது, ஆனால் இதற்குப் பிறகும் பலரின் கணக்கில் வட்டித் தொகை கிரெடிட் செய்யப்படவில்லை. இப்பிரச்னை குறித்து அரசு தரப்பில் கூறும் போது, சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்களுக்கு 8.1 சதவீத வட்டி கிடைக்கும்
மத்திய அரசு பிஎஃப்-க்கு 8.1 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்ததாகும். அதே நேரத்தில், இதற்கு முன்பு 1977-78ல் 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு புத்தாண்டில் எக்கச்சக்க பரிசுகள்


உங்கள் வட்டித் தொகையை எவ்வாறு சரிபார்க்கலாம்?


மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் செக் செய்யலாம்: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்து வட்டித் தொகையைச் சரிபார்க்கலாம். அதன்படி 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.


அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து செக் செய்யலாம்: அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.in மூலமாகவும் நீங்கள் பேலன்ஸ் ஐ செக் செய்யலாம். இதில் யூஏஎன் எண், பாஸ்வேர்டு மற்றும் கேப்ட்சா விவரங்களை உள்ளிட்ட பின்னர் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு இ-பாஸ்புக்கில் உங்கள் இருப்பை சரிபார்க்கலாம்.


UMANG செயலி மூலம் செக் செய்யலாம்: UMANG செயலியில் இபிஎஃப்ஓ ​​என்பதைக் கிளிக் செய்யவும், பின்னர் வியூ பாஸ்புக் என்பதைக் கிளிக் செய்து அங்கு யூஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை நிரப்ப வேண்டும். இப்போது மொபைலுக்கு வரும் ஓடிபி-ஐ வைத்து பிஎஃப் இருப்பைச் சரிபார்க்கலாம்.


எஸ்எம்எஸ் மூலம் விவரங்களைச் சரிபார்க்கவும்: பிஎப் கணக்கு இருப்பினை தெரிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் இந்த மொபைல் எண்ணிற்கு மொழியினை தேர்வு செய்ய EPFOHO UAN ENG என்று அனுப்பலாம்.


மேலும் படிக்க | ரயில்வே டிக்கெட் ஏஜெண்டை ஓவர் டேக் செய்து டிக்கெட்டை கன்பார்ம் பண்ணுங்க! ஐஆர்சிடிசி டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ