பழைய நிறுவனத்தின் PF கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?

பழைய பிஎஃப் இருப்பை புதிய கணக்கிற்கு மாற்ற வங்கி கணக்கு எண், மொபைல் எண், ஆதார் எண் போன்ற அனைத்து வகையான தகவல்களும் உங்கள் யூஏஎன் எண்ணில் அப்டேட் செய்ய வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Oct 10, 2022, 01:54 PM IST
  • புதிய நிறுவனத்திற்கு மாறினாலும் பழைய பிஎஃப் கணக்கை தொடர்ந்து கொள்ளலாம்.
  • பழைய பிஎஃப் இருப்பை புதிய கணக்கிற்கு மாற்ற யூஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்ட் அவசியம்.
  • முக்கிய தகவல்களை யூஏஎன் எண்ணில் அப்டேட் செய்ய வேண்டும்.
பழைய நிறுவனத்தின் PF கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?

இபிஎஃப்ஓ-வின் விதியின்படி ஊழியர் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினாலும் பழைய பிஎஃப் கணக்கை அப்படியே தொடர்ந்து கொள்ளலாம்.  அதனால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை மாற்றியிருந்தால் கண்டிப்பாக உங்களது பிஎஃப் இருப்பையும் மாற்றிக்கொள்ள வேண்டும், சில சமயம் சிலர் புதிய நிறுவனத்திற்கு மாறியதும் அவர்களது பழைய பிஎஃப் கணக்கிலுள்ள இருப்பை மறந்துவிடுகிறார்கள்.  நீங்கள் எத்தனை நிறுவனங்களுக்கு மாறியிருந்தாலும் சரி பழைய பிஎஃப் கணக்கிலுள்ள இருப்பை புதிய நிறுவனத்தின் பிஎஃப் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.  பழைய பிஎஃப் இருப்பை புதிய கணக்கிற்கு மாற்ற யூஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்ட் அவசியம், மேலும் இதனுடன் வங்கி கணக்கு எண், மொபைல் எண், ஆதார் எண் போன்ற அனைத்து வகையான தகவல்களும் உங்கள் யூஏஎன் எண்ணில் அப்டேட் செய்ய வேண்டும்.  தற்போது பிஎஃப் இருப்பை மாற்றுவதற்கான செயல்முறையை பற்றி இங்கே காண்போம்.

மேலும் படிக்க| உங்கள் பாஸ்வேர்டை திருடும் 400 ஆஃப்கள் - பேஸ்புக் விடுத்த எச்சரிக்கை

பிஎஃப் கணக்கின் இருப்பை சரிபார்த்தல் : 

- முதலில் இபிஎஃப்ஓ-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/க்குச் செல்லவும்.

- யூஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டு மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.

- உள்நுழைந்த பிறகு முகப்புப் பக்கத்தில் மெம்பர்ஸ் ப்ரொஃபைல் பக்கத்தில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை இங்கே சரிபார்க்கவும்.

- பெயர், ஆதார் விவரங்கள், பான் கார்டு, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும்.

- பிஎஃப் மாற்றுவதற்கு முன், பாஸ்புக்கைச் சரிபார்க்க வேண்டும்.  இதற்கு பாஸ்புக் என்ற ஆப்ஷன் தோன்றும் அதில் 'வியூ' என்பதற்குச் செல்ல வேண்டும்.

- பாஸ்புக்கில் கிளிக் செய்த பிறகு, நீங்கள் மீண்டும் ஒரு முறை லாக் இன் செய்ய வேண்டும்.

- உள்நுழைந்த பிறகு, உறுப்பினர் ஐடியைக் கிளிக் செய்தவுடன், முழுமையான பட்டியல் திறக்கும், இதில் நீங்கள் பணிபுரிந்த அனைத்து நிறுவனங்களின் உறுப்பினர் ஐடிகளும் இருக்கும்.  பாஸ்புக்கைப் பார்ப்பதன் மூலம் உங்கள் எல்லா நிறுவனங்களிலும் பிஎஃப் இருப்பைச் சரிபார்க்கலாம்.

பழைய பிஎஃப் இருப்பை புதிய நிறுவனத்திற்கு மாற்றும் செயல்முறை:

- பழைய பிஎஃப்-ஐ மாற்றுவதற்கு முன், உங்கள் பழைய நிறுவனம் உங்கள் நுழைவு தேதி மற்றும் வெளியேறும் தேதியைப் அப்டேட் செய்துள்ளதை என்பதைச் சரிபார்க்கவும்.

- இதற்கு, நீங்கள் 'வியூ' என்பதற்கு சென்று சர்விஸ் ஹிஸ்டரி ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

- பழைய நிறுவனம் தேதிகளை அப்டேட் செய்திருந்தால் பிஎஃப்-ஐ எளிதாக மாற்றலாம்.

- ஆன்லைன் சேவைகளுக்குச் சென்று ONE MEMBER ONE EPF கணக்கு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

- இப்போது திரையில் தோன்றும் பக்கத்தில் உங்களது தனிப்பட்ட தகவல்கள் இருக்கும், ஏற்கனவே உள்ள நிறுவனத்தின் பிஎஃப் கணக்கின் விவரங்கள் கிடைக்கும். 

- அதற்குக் கீழே பிஎஃப் மாற்ற வேண்டிய பழைய முதலாளியின் விவரங்கள் இருக்கும், நீங்கள் மாற்றப் போகும் பிஎஃப் உங்களின் தற்போதைய அல்லது பழைய முதலாளியால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

- இப்போது உங்களது யூஏஎன் விவரங்களை உள்ளிட வேண்டும், பிறகு இதுவரை நீங்கள் பணிபுரிந்த அனைத்து  நிறுவனங்களின் பிஎஃப் ஐடிகள் வரும்.  அதில் யாருடைய பணத்தை மாற்ற விரும்புகிறீர்களோ அதைத் தேர்ந்தெடுக்கவும்.

- அதன் பிறகு GET OTP என்பதைக் கிளிக் செய்து ஓடிபி பெற வேண்டும்.

- செயல்முறை வெற்றியடைந்ததும் ஒரு பிரிண்ட் எடுத்து உங்கள் நிறுவனத்தில் கொடுக்க வேண்டும், அது பிஎஃப் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.

- உங்கள் பழைய பிஎஃப் இருப்பு 7 முதல் 30 நாட்களில் புதிய கணக்கிற்கு மாற்றப்படும்.

மேலும் படிக்க | ஆதார் எண் இல்லாமல் ஆதார் கார்டை எப்படி டவுன்லோட் செய்வது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News