PM Kisan Yojana: பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் 2,43,03,867 பேருக்கு 12வது தவணை வரவில்லை
PM Kisan Scheme: பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் 2,43,03,867 விவசாயிகளுக்கு 12வது தவணை பணம் வரவில்லை, கணக்கில் பணம் வருமா வராதா?
நியூடெல்லி: பிரதம மந்திரி கிசான் திட்டம் திட்டதில் 2,43,03,867 விவசாயிகளுக்கு 12வது தவணை பணம் வரவில்லை, கணக்கில் பணம் வருமா இல்லையா என்பதை அறிய இந்த எண்ணை அழைத்து தகவல்களை தெரிந்துக் கொள்ளவும். பிரதம மந்திரி கிசான் தொடர்பான எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க, விவசாயிகள், கட்டணமில்லா எண்ணை அழைத்து தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம். பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதை கட்டணமில்லா எண் மூலம் விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.
புகார்களை பதிவு செய்ய pmkisan-ict@gov.in என்கிற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் அல்லது 011-24300606 என்கிற உதவி எண்ணுக்கும் அழைக்கலாம்.
மேலும் படிக்க | ஆதார் கார்ட் தரவுகளை பாதுகாக்க அதை லாக் / அன்லாக் செய்யலாம்: செயல்முறை இதோ
பிரதமர் நரேந்திர மோடி 17 அக்டோபர் 2022 அன்று பிரதமர் கிசானின் 12வது தவணையை வெளியிட்டார். 12வது தவணையாக 8,84,56,693 விவசாயிகளின் கணக்கில் ரூ.2000-2000 டெபாசிட் செய்யப்பட்ட நிலையில், 2,43,03,867 விவசாயிகளுக்கு பணம் வரவில்லை.
இந்தத் திட்டத்தின் 11வது தவணையில், 11,27,60,560 விவசாயிகளின் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பணம் இல்லாத விவசாயிகள் PM Kisan என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் புகாரை பதிவு செய்யலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) பயனாளிகளுக்கு மத்திய அரசு ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா தொடர்பான ஏதேனும் பிரச்சனைகளுக்கு விவசாயிகள் கட்டணமில்லா எண்கள் - 1800 180 1551 அல்லது 155261 என்ற எண்ணை அழைக்கலாம் என்று வேளாண் அமைச்சகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | PM Kisan eKYC: பிரதமர் கிசான் சம்மான் நிதி 13ம் தவணை வாங்க இதை செய்யுங்க
2,43,03,867 விவசாயிகளுக்கு 12வது தவணை கிடைக்கவில்லை
PM Kisan இன் இணையதளத்தின்படி, PM Kisan இன் 12வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி 17 அக்டோபர் 2022 அன்று வெளியிட்டார். 12வது தவணையில் 2,43,03,867 விவசாயிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. 11வது தவணையாக 11,27,60,560 விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூ.2000 மாற்றப்பட்டது.
e-KYC தேவை
பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு eKYC கட்டாயம் ஆகும். OTP அடிப்படையிலான eKYC, பிஎம் கிசான் போர்ட்டலில் கிடைக்கிறது அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்கு அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும் படிக்க | IRCTC: ரத்தான ரயில்களின் பட்டியலை சரிபார்த்த பிறகு ரயில் பயணத்திற்கு கிளம்பலாமே
13வது தவணை விரைவில் வழங்கப்படும்
பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம், கடந்த 2019ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது, இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும், விவசாய நிலத்துடன் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6000 என மூன்று மாத தவணையாக தலா ரூ.2000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ