பிரதமர் கையால் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது - முழு விவரம் இதோ...
வரும் அக். 22ஆம் தேதி அன்று 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளும் பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்க உள்ளார்.
10 லட்சம் பேருக்கு வேலைவாயப்பு வழங்கும் திட்டமான ‘ரோஸ்கர் மேளா’-வை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். ரோஸ்கர் மேளாவை பிரதமர் மோடி காணொளி மூலமாக தொடங்கி வைப்பார் என்றும், விழாவில் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,"இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும், குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கும் பிரதமரின் செயல்திட்டங்களில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னோடி திட்டமாக இருக்கும். பிரதமரின் வழிகாட்டுதலின்படி, தற்போதுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் செயல்பட்டு வருகின்றன" என குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க | Rupee Vs Dollar: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள், இந்திய அரசின் 38 அமைச்சகங்கள்/துறைகளில் சேர்க்கப்படுகிறார்கள். நியமனம் செய்யப்பட்டவர்கள் அரசின் பல்வேறு குரூப்களில் இணைந்து கொள்வார்கள். குரூப் – ஏ, குரூப் – பி (அரசிதழில் வெளியிடப்பட்டது), குரூப் – பி (அரசிதழில் வெளியிடப்படாது) மற்றும் குரூப் – சி. பணியிடங்களில் மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், உதவி ஆய்வாளர், கான்ஸ்டபிள், எல்டிசி, ஸ்டெனோ, பிஏ, வருமான வரி ஆய்வாளர்கள், எம்.டி.எஸ். போன்றவைகள் இதில் அடங்கும்.
இந்த ஆட்சேர்ப்புகள் மிஷன் முறையில் அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் தாங்களாகவோ அல்லது UPSC, SSC, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்ற ஆட்சேர்ப்பு முகமைகள் மூலமாகவோ ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவான ஆட்சேர்ப்புக்காக, தேர்வு செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டு பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் இவை நடைபெற்றுள்ளது.
தீபாவளி வரும் அக். 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த பணி நியமனங்களுக்கு 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ