பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB வாடிக்கையாளர்) கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. நீங்கள் PNB வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒரு விவசாயியாக இருந்தால், 2 லட்சம் ரூபாய் லோன் உங்களுக்கு கிடைக்கும். பஞ்சாப் நேஷ்னல் வங்கியைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் பண வசதிகளை செய்து கொடுக்கிறது. இந்த வங்கி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, அரசு மற்றும் வங்கி மூலம் பல திட்டங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் விவசாயிகளுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PNB வங்கியின் அறிவிப்பு


பஞ்சாப் நேஷனல் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டில், PNB ஸ்வர்னிம் - விவசாய தங்கக் கடன் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த திட்டம் மூலம், உங்கள் விவசாயம் எந்த பருவத்தில் இருந்தாலும், உங்கள் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம். இதைப் பற்றிய கூடுதல் தகவல் தேவைப்பட்டால், உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் விவசாயம் தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள கடன் வழங்கப்படுகிறது. தங்க நகைக்கடன்களை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். 



பஞ்சாப் வங்கியின் அறிவிப்பு என்ன?


பஞ்சாப் வங்கி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் விவசாயிகள், தங்களின் விவசாய தேவைகளுக்காக தங்கள் வங்கியில் நகையை அடமானம் வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. குறைந்த வட்டி மற்றும் குறைந்த ஆவணங்களை கொடுத்தால் மட்டும் போதும். தகுதியான நபர்கள் மற்றம் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் இந்த கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம். நபர் ஒருவர் 2 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல் தேவை என்றால் வங்கியின் அதிகாரப்பூர்வ தளமான pnbindia.in-க்கு சென்று கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | Quaternary Twins: அமெரிக்காவின் ‘மரபணு’ சகோதரர்கள்; வியக்கும் விஞ்ஞானிகள்!


மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ