வங்கி எச்சரிக்கை: உடனே இதை செய்யாவிட்டால் யாருக்கும் பணம் அனுப்ப முடியாது!
கேஒய்சி படிவத்தில் உங்கள் பெயர், வங்கிக் கணக்கு எண், பான் கார்டு எண், ஆதார் அட்டை எண், மொபைல் எண் மற்றும் முழு முகவரி போன்ற தகவல்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கி ஒரு முக்கியமான செய்தியினை அறிவித்துள்ளது. அதாவது இதுவரை கேஒய்சி செய்யாதவர்கள் விரைவில் அந்த செயல்முறையை முடித்துவிட வேண்டும் என்று வங்கி அதன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. வங்கியின் அனைத்து வாடிக்கையாளர்களும் டிசம்பர் 12, 2022க்குள் கேஒய்சி-ஐப் பெற வேண்டும் என்று வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. கேஒய்சி செய்தால் தான் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு செயலில் இருக்கும் என்றும் அப்படி செய்யாவிட்டால் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான டிரான்ஸாக்ஷனும் செய்ய முடியாது என்றும் வங்கி திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேலும் படிக்க | கார் கடன் வாங்க வேண்டுமா? இந்த ‘4’ விஷயத்தை மறக்காம ஃபாலோ பண்ணுங்க!
வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு கடந்த பல மாதங்களாகவே கேஒய்சி-யை அப்டேட் செய்யுமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்து வருகிறது. வங்கி கூறியுள்ளபடி, நீங்கள் இன்னும் கேஒய்சி-ஐ அப்டேட் செய்யவில்லை என்றால் டிசம்பர் 12 முதல் உங்கள் கணக்கில் இருந்து உங்களால் எந்த விதமான டிரான்ஸாக்ஷனும் செய்ய முடியாது. கேஒய்சி செய்வதன் மூலம் வாடிக்கையாளரை பற்றிய அனைத்து தகவல்களையும் வங்கி வைத்திருக்கும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 6 மாதங்களுக்குள் அல்லது 1 வருடத்திற்கும் வங்கியில் கேஒய்சி படிவத்தை நிரப்ப வேண்டும்.
கேஒய்சி படிவத்தில் உங்கள் பெயர், வங்கிக் கணக்கு எண், பான் கார்டு எண், ஆதார் அட்டை எண், மொபைல் எண் மற்றும் முழு முகவரி போன்ற தகவல்களை நீங்கள் நிரப்ப வேண்டும். வீட்டிலிருந்தபடியே கேஒய்சி அப்டேட் செய்ய, வங்கிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது ஆதாரிலிருந்து மொபைலில் ஓடிபி-ஐ பெறுவதன் மூலம் இதை செய்யலாம். வங்கி கிளைகளுக்கு நேரடியாக சென்றும் நீங்கள் கேஒய்சி அப்டேட் செய்துகொள்ளலாம். வங்கி கிளையிலிருந்து கேஒய்சி படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ