தபால் அலுவலகத்தின் அசத்தல் திட்டம்: மாதா மாதம் வட்டியில் மட்டுமே ரூ.10,000க்கு மேல் வருமானம்
Post Office Monthly Income Scheme: அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தைக் காணலாம். தபால் அலுவலகத்தின் இந்த அற்புதமான திட்டத்தைப் பற்றிய விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
Post Office Monthly Income Scheme: சேமிப்பில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? எதிர்காலத்திற்காக பல திட்டங்களை ஆராய்ந்து சிறந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யும் அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். முதலீட்டில் ஆர்வம் கொண்டுள்ள அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. தபால் அலுவலகத்தின் ஒரு மிகச்சிறந்த திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Monthly Income Scheme:
நாம் அனைவரும் கடினமாக உழைத்து ஈட்டும் பணத்தை சேமிப்பதற்கும், பெருக்குவதற்கும் பல வழிகளை தேடுகிறோம். இன்றைய காலத்தில் இதற்கான பல வழிகளும் உள்ளன. அஞ்சலகத்தின் MIS திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தைக் காணலாம். தபால் அலுவலகத்தின் இந்த அற்புதமான திட்டத்தைப் பற்றிய விவரங்களை பற்றி இங்கே காணலாம். பொதுவாகவே தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்வது மிக பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது. இது தவிர, இவற்றில் நல்ல வருமானத்திற்கான உத்தரவாதமும் கிடைக்கிறது. போஸ்ட் ஆபிஸ் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை உருவாக்க விரும்பினால், மாதாந்திர வருமானத் திட்டம் MIS திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் வருமான வரி விலக்கும் உண்டு.
MIS: அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்சம்
அஞ்சல் அலுவலகத்தின் MIS திட்டத்தில் அதாவது மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஒற்றை மற்றும் கூட்டுக் கணக்கு வசதி வழங்கப்படுகிறது. அதாவது ஒரே கணக்கில் ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதில் நீங்கள் வட்டி மூலம் சம்பாதிக்கலாம். மேலும் இரண்டு பேர் சேர்ந்து கணக்கு தொடங்க விரும்பினால், இந்த கூட்டு கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் முதலீடு செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் நீங்கள் அதிகபட்ச வருமானத்தை உருவாக்க முடியும்.
Post Office Monthly Income Scheme: வட்டி விகிதம்
தற்போது, போஸ்ட் ஆபிஸ் எம்ஐஎஸ் திட்டத்தின் கீழ் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. இதில் 5 ஆண்டுகளுக்குத் தொகையை டெபாசிட் செய்யலாம். முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வட்டி மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். 5 ஆண்டுகள் மெச்யூரிட்டிக்கு பிறகு, முதலீட்டாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெறுவார்கள். ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்திருந்தால், வட்டித் தொகையிலிருந்து மட்டும் ஒவ்வொரு மாதமும் ரூ.5550 சம்பாதிக்கலாம்.
POMIS: ரூ.15 லட்சம் டெபாசிட்
ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.10,000க்கு மேல் வருமானம் ஈட்டலாம். எம்ஐஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு, வருமான வரி சட்டம் 80C -இன் கீழ் தள்ளுபடியும் கிடைக்கும். தபால் நிலைய மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், குறைந்தபட்சமாக 1000 ரூபாயில் முதலீட்டை தொடங்கலாம். இந்த திட்டத்தில் ரூ.1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ