)
EPF Withdrawal: EPF நிதியில் மாதா மாதம் பங்களிக்கும் ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, விரைவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் UAN அடிப்படையிலான ஒற்றைக் கணக்கியல் முறையை (Single Accounting System) அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் அதன் பயன்பாட்டு மென்பொருளை மறுசீரமைத்த பின்னர், க்ளெய்ம்களை விரைவாகத் தீர்ப்பதற்கு குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் செயல்முறை ஓட்டத்தை தானியங்கி இயக்கமாக்க பணிபுரிந்து வருகிறது. இந்த தகவலை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்துடனான (CDAC) ஆலோசனையுடன் புதிய மென்பொருள் உருவாக்கப்படுகிறது. சமீப காலங்களில், இந்த அமைப்பு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர்களின் செயல்முறையளை எளிதாக்க பல சீர்திருத்தங்களை செய்துள்ளது. சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, EPFO க்ளெய்ம் செட்டில்மெண்டுகளை தானியங்கி முறையில் மாற்றியுள்ளதோடு க்ளெய்ம்கள் நிராகரிக்க்கப்படுவதையும் குறைத்துள்ளது.
க்ளெய்ம்களை விரைவாக செட்டில் செய்வதற்காக, 1 லட்சம் ரூபாய் வரையிலான நோய், கல்வி, திருமணம் மற்றும் வீட்டுவசதி ஆகிய தேவைகளுக்கான முன்பணத்தை அதாவது அட்வான்ஸ் தொகையை தானாக செட்டில் செய்யும் முறை EPFO ஆல் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 25 லட்சம் அட்வான்ஸ் க்ளெய்ம்கள் ஆட்டோ பயன்முறையில் தீர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலர் சுமிதா தாவ்ரா, ஜூன் 13, 2024 அன்று அமைப்புக்குள் இந்த சீர்திருத்தங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தில் நீலம் ஷமி ராவ், CPFC மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் EPFO இன் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். EPFO ஆல் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சீர்திருத்தங்களை விவரிக்கும் போது, 50 சதவீதத்திற்கும் அதிகமான நோய் சிகிச்சைக்கான க்ளெய்ம்கள் ஆட்டோ பயன்முறையில் தீர்க்கப்பட்டுள்ளன என்று அறிக்கை மேலும் கூறியது. இது க்ளெய்ம்களின் தீர்வின் வேகத்தை அதிகரித்துள்ளது. மேலும், அவற்றில் பெரும் எண்ணிக்கையானது இப்போது 03 நாட்களுக்குள் தீர்க்கப்படுகிறது.
உறுப்பினர்களின் KYC ஆதார்-இணைக்கப்பட்ட கணக்குகளுக்கான காசோலை புத்தகம்/பாஸ்புக் ஆகியவற்றை பதிவேற்றம் செய்வதற்கான கட்டாய தேவை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 13 லட்சம் க்ளெய்ம்களுக்கான ஆய்வு தேவை நீக்கப்பட்டது. முழுமையடையாத வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் தகுதியற்ற வழக்குகளை நிராகரித்தல் போன்றவற்றை உறுப்பினர்கள் எளிதாக புரிந்துகொள்வதற்கும் EPFO வழிவகை செய்துள்ளது.
ஆட்டோ டிரான்ஸ்ஃபர்களின் (Auto Transfer) எண்ணிக்கையும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அமைச்சகத்தின் வெளியீடு தெரிவிக்கின்றது. ஏப்ரல் 24 அன்று 02 லட்சமாக இருந்த இந்த அளவு மே 2024 இல் 06 லட்சமாக அதிகரித்துள்ளது. மறுஆய்வுக் கூட்டம் சமூகப் பாதுகாப்பின் விரிவாக்கத்தின் அவசியத்தையும், செயல்முறைகள் மற்றும் வணிக முறைகளின் எளிமைக்கும் புதிய முயற்சிகளை எடுத்துரைத்தது. வழக்கு மேலாண்மை மற்றும் தணிக்கையில் செயல்பாட்டு சீர்திருத்தங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ