Post office double benefit திட்டம்: கணவன் மனைவி joint account-ல் இத்தனை நன்மைகளா!!
தபால் நிலையத்தின் மாத வருமான திட்டத்தில் (MIS), ஒவ்வொரு மாதமும் பணம் ஈட்ட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
Post Office Schemes: நீங்கள் உங்கள் வேலையில் வரும் ஊதியத்தைத் தவிர, பிற வழிகளிலும் வருமானத்தை ஈட்ட விழைகிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் (Post Office MIS) திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கக்கூடும். இது தவிர, இந்தத் திட்டம் கணவன் மனைவிக்கு இரட்டை நன்மைகளைத் தரும் வகையிலும் உள்ளது. தபால் நிலையத்தின் மாத வருமான திட்டத்தில் (MIS), ஒவ்வொரு மாதமும் பணம் ஈட்ட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இது தவிர, அதில் ஒரு ஜாயிண்ட் அகௌண்டைத் (Joint Account) திறக்கும் வசதியையும் பெறுவீர்கள். இதில் நீங்கள் எவ்வாறு இரட்டை நன்மைகளைப் பெற முடியும் என்பதை இங்கே பார்க்கலாம்.
ஆண்டுக்கு ரூ .59,400 சம்பாதிக்கலாம்
இந்தத் திட்டத்தில், கூட்டுக் கணக்கு அதாவது ஜாயிண்ட் அகௌண்ட் மூலம், உங்கள் லாபம் இரட்டிப்பாகிறது. இந்த சிறப்புத் திட்டத்தைப் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே காணலாம். இதில் சேருவதன் மூலம், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ .59,400 வரை பணம் ஈட்ட முடியும்.
தபால் அலுவலகம் திட்டம் என்ன?
MIS திட்டத்தில் திறக்கப்பட்ட கணக்குகளை ஒற்றை (Single) மற்றும் கூட்டு (Joint) என இரண்டு வகையிலும் திறக்க முடியும். தனிப்பட்ட கணக்கைத் திறக்கும்போது, இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ .1,000 மற்றும் அதிகபட்சமாக ரூ .4.5 லட்சம் முதலீடு செய்யலாம். ஜாயிண்டு அகௌண்டில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் (Pensioners) மூத்த குடிமக்களுக்கும் மிகவும் பயனளிக்கிறது.
ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான DA அறிவிப்பு எப்போது?
திட்டத்தின் நன்மைகள் என்ன?
MIS-ல் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்தும் ஜாயிண்ட் அகௌண்டை திறக்கலாம். இந்த கணக்கிற்கு ஈடாக பெறப்பட்ட வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாக வழங்கப்படுகிறது. ஜாயிண்ட் அகௌண்டை எப்போது வேண்டுமானாலும் சிங்கிள் அதாவது தனிப்பட்ட கணக்காக மாற்றலாம். ஒற்றைக் கணக்கையும் ஜாயிண்ட் கணக்காக மாற்றலாம். கணக்கில் எந்தவொரு மாற்றத்தை செய்ய வேண்டுமானாலும், அனைத்து கணக்கு உறுப்பினர்களின் கூட்டு விண்ணப்பம் வழங்கப்பட வேண்டும்.
திட்டம் எவ்வாறு செயல்படுகிறது
இந்த திட்டத்தில், தற்போது 6.6 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கிறது. திட்டத்தின் கீழ், உங்கள் மொத்த வைப்புகளின் வருடாந்திர வட்டிக்கு ஏற்ப வருமானம் கணக்கிடப்படுகிறது. இதில், உங்கள் மொத்த வருவாய் ஆண்டு அடிப்படையில் இருக்கும். எனவே, இது மாதத்திற்கு 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இதில் ஒரு பகுதியை நீங்கள் ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் பெறலாம். உங்களுக்கு இது மாத அடிப்படையில் தேவையில்லை என்றால், இந்தத் தொகையை மொத்தத்தில் சேர்ந்து, நீங்கள் அதற்கும் வட்டி பெறுவீர்கள்.
வருமானம் எப்படி இருக்கும் என்பதை உதாரணம் மூலம் புரிந்து கொள்ளுங்கள்
Post Office-ன் இந்த திட்டத்தின் கீழ் கணவன் மற்றும் மனைவி ஜாயிண்ட் கணக்கில் 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். 9 லட்சம் வைப்புத்தொகையின் 6.6 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டு வருமானம் ரூ .59,400 ஆகும். இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டால், ஒரு மாதத்திற்கு 4950 ரூபாயாக இருக்கும். அதாவது, உங்கள் கணக்கில் மாதந்தோறும் ரூ .4950-ஐ பெறலாம். அதே நேரத்தில், உங்கள் முதலும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் விரும்பினால், நீங்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 5-5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டிக்க முடியும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR