Post Office Scheme Vs Bank FD Vs PPF: நாட்டில் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் வங்கி மற்றும் தபால் அலுவலக FD, PPF, தேசிய சேமிப்புச் சான்றிதழ் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்றவை அடங்கும். சிறு சேமிப்புத் திட்டம் குடிமக்களை தொடர்ந்து சேமிக்க ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டு வரப்படுகிறது. இவற்றுக்கு அரசு முடிவு செய்யும் நிலையான வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அவர்களின் வட்டியை அரசாங்கம் தீர்மானிக்கிறது. வங்கிகள் தங்கள் FD முதலீட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய வட்டியை தீர்மானிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிகளின் FD மீது கிடைக்கக் கூடிய வட்டி


பெரிய வங்கிகளில், HDFC வங்கி FD முதலீட்டுக்கு அதிகபட்சமாக 7.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. எஸ்பிஐ என்னும் பாரத ஸ்டேட் வங்கி எஃப்டிக்கு ஆண்டு தோறும் 7.50 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு 4 சதவீதம் முதல் 8.2 சதவீதம் வரை வட்டியை அரசு வழங்குகிறது. அத்தகைய திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 2023 அக்டோபர்-டிசம்பர் மாத இறுதியில் அரசாங்கம் திருத்தும். இவற்றில் மாற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவு என்று நம்பப்படுகிறது.


பொது வருங்கால வைப்பு நிதி PPF: 7.1 சதவீதம்


முதலீடுகளில் பலவிதம் இருந்தாலும், பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி வழங்கும் முதலீடுகளில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி என்று அழைக்கப்படும் PPF . பொது வருங்கால வைப்பு நிதி என்பது மத்திய அரசின் ஆதரவுடன் வரி இல்லாத சேமிப்பு சேமிப்பு திட்டம் என்பதே இதன் சிறப்பம்சம்.


சிறு சேமிப்பு திட்டத்தில் வட்டி


சேமிப்பு கணக்கு - 4 சதவீதம்


1 ஆண்டு அஞ்சல் அலுவலக FD - 6.9 சதவீதம்


2 ஆண்டு அஞ்சல் அலுவலக FD - 7.0 சதவீதம்


3 ஆண்டு அஞ்சல் அலுவலக FD - 7 சதவீதம்


5 ஆண்டு அஞ்சல் அலுவலக FD: 7.5 சதவீதம்


5 ஆண்டு RD: 6.70 சதவீதம்


மேலும் படிக்க | சிறுசேமிப்புத் திட்டங்களில் பெஸ்ட் எது? மூணு ஆப்ஷன்கள்... உங்கள் சாய்ஸ் எது?


தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC): 7.7 சதவீதம்


கிசான் விகாஸ் பத்ரா: 7.5 சதவீதம் (115 மாதங்களில் முதிர்வு)


சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்): 8.0 சதவீதம்


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: 8.2 சதவீதம்


மாதாந்திர வருமானத் திட்டம்: 7.4 சதவீதம்


மூன்று வகையான சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. சேமிப்புத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமானத் திட்டங்கள். சேமிப்பு திட்டங்களில் 1 முதல் 3 ஆண்டு வைப்புத் திட்டம், 5 ஆண்டு ஆர்.டி. தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) போன்ற சேமிப்புச் சான்றிதழ்களும் இந்த வகை சேமிப்பு திட்டங்களில் அடங்கும். சமூக பாதுகாப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவை அடங்கும்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.... வட்டியை அள்ளித் தரும் ‘சில’ வங்கிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ