Post Office Savings Scheme: எதிர்கால தேவைக்காக பலரும் ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள், ஆனால் பலருக்கு தாங்கள் முதலீடு செய்யும் திட்டத்தில் நம்பகமானது தானா என்கிற சந்தேகம் பரவலாக இருந்து வருகிறது.   சரியான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வது என்பது பலருக்கு கடினமாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.  பல கவர்ச்சிகரமான திட்டங்கள் மக்களை சில சமயங்களில் ஏமாற்றிவிடக்கூடும் என்பதால் முதலீடு குறித்த பயம் பலருக்கும் இருக்கிறது.  தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தாலும், சந்தையில் தனிநபர் சேமிப்பு தொடர்பான திட்டங்கள் பல இருக்கின்றது.  பெரும்பாலும் தனியார் நிறுவனங்களை காட்டிலும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மீது மக்களுக்கு அதிகளவில் நம்பிக்கை இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.  மக்கள் பலரும் அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர், ஏனெனில் இதில் வட்டியுடன் கூடிய நல்ல வருமானம் கிடைக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | gautam adani: "கடத்தப்பட்டேன்...மரணத்தை 2 முறை அருகில் இருந்து பார்த்தேன்" கவுதம் அதானி



15 வருட பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு:


இந்தத் திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை டெபாசிட் செய்ய வேண்டும், இதில் உங்களுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.  வட்டியானது ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது.  நீங்கள் டெபாசிட்டை 12 கால தவணைகளில் 
செலுத்தி கொள்ளலாம் மற்றும் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும், வேண்டுமானால் நீங்கள் இந்த கணக்கை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீட்டித்து கொள்ளலாம்.  வருமான வரிச் சட்டத்தின் 80சி மற்றும் இது 3வது நிதியாண்டிலிருந்து கடன் வசதியை வழங்குகிறது.


தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள்:


இந்த திட்டம் 5 வருட முதிர்வு காலத்துடன் வருகிறது, இதில் உங்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகின்றது.  முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை மற்றும் குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 ஆகும்.  நீங்கள் ரூ.100, ரூ. 500, ரூ. 1,000, ரூ. 5,000 மற்றும் ரூ.10,000 என டெபாசிட் செய்து கொள்ளலாம் மற்றும் வங்கிக் கடன்களைப் பெறுவதற்கு என்எஸ்சி சான்றிதழ்களை அடகு வைத்துக்கொள்ளலாம்.


சுகன்யா சம்ரித்தி:


பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும், பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு நிம்மதியை அளித்திடவும் சுகன்யா சம்ரித்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தில் உங்களுக்கு ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.  இந்தத் திட்டத்தில் நீங்கள் உங்கள் பெண் குழந்தையின் பெயரில் தான் கணக்கை தொடங்க முடியும், 10 வயது வரை கணக்கைத் திறக்கலாம்.


மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:


மூத்த குடிமக்களுக்கு சிறந்த வருமானத்தை தரும் இந்த திட்டம் ஐந்து வருட முதிர்வு காலத்துடன் வருகின்றது.  அதிகபட்சம் ரூ.15 லட்சத்திற்கு மிகாமல் ரூ.1000க்கு மேல் ஒரே ஒரு டெபாசிட் மட்டுமே இருக்க முடியும்.  இதில் உங்களுக்கு 8 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது மற்றும் 60 வயதுடைய தனிநபர் இந்த திட்டத்தில் பங்களிக்கலாம்.


தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கு:


மாதாந்திர முதலீட்டுத் திட்டம் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.  தனிநபர் கணக்கிற்கு அதிகபட்சமாக ரூ 4.5 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ 9 லட்சம் வரை டெபாசிட் செய்துகொள்ளலாம்.


மேலும் படிக்க | Tax Saving Plans : 2023இல் வருமான வரியை குறைக்கணுமா... இதை பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ