Income Tax: 7 அடுக்குகள் கொண்ட வரிவசூல் முறை, முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்

Income Tax Slabs Rate: 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 9, 2023, 05:00 PM IST
  • பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
  • பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்.
  • வருமான வரி விலக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Income Tax: 7 அடுக்குகள் கொண்ட வரிவசூல் முறை, முக்கிய  தகவலை தெரிந்து கொள்ளுங்கள் title=

Income Tax Slab Rate : 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அடுத்த மாதம் பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட உள்ளார். ஒட்டுமொத்த நாட்டின் பார்வையும் இம்முறை பட்ஜெட் மீதுதான் இருக்கும். ஏனெனில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் இதுவாகும். எனவே இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி:
தற்போது நாட்டில் இரண்டு வருமான வரி முறைகள் உள்ளன, இந்த இரண்டு விதிகளின்படி நாட்டு மக்களால் வரி செலுத்தப்பட்டு வருகின்றது. ஒன்று பழைய வரி முறை மற்றொன்று புதிய வரி முறை. எனவே நாட்டில் பின்பற்றப்படும் இந்த இரண்டு வரி முறைகளில், புதிய வரி முறை குறித்த சில தகவல்களை இன்று காண உள்ளோம்.

மேலும் படிக்க | எழுதினால் ரூபாய் நோட்டுகள் செல்லாது? - உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

வருமான வரி அடுக்கு விகிதம்:
உண்மையில், 2020 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி விதிப்பை அறிவித்தார். இதுதான் புதிய வரி முறையாகும். புதிய வரி விதிப்பு வரி செலுத்துபவர்களுக்கு விருப்பமானது, ஏனெனில் இறந்த முறையில் குறைந்த வரி விகிதம் செலுத்தப்படுகிறது. இருப்பினும், இதில் வேறு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. அதேபோல் புதிய வரி முறையில் 7 வகையான வரி அடுக்குகள் உள்ளன.

புதிய வரி விதிப்பு முறை:
அதன்படி புதிய வரி விதிப்பில், ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வட்டி விதிக்கப்படாது. இதற்குப் பிறகு, அதாவது 2.5 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 5% வரி விதிக்கப்படும். அதேபோல் ஆண்டு வருமானம் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை உள்ளவர்கள் 10% வரி விதிக்கப்படும். மேலும் ஆண்டு வருமானம் 7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருப்பவர்களுக்கு 15% வரி விதிக்கப்பட்டு வருகின்றது.

புதிய வரிவிதிப்பு அடுக்கு:
அதேசமயம் புதிய வரி விதிப்பில், ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும். ஆண்டுக்கு ₹ 12.5 லட்சம் முதல் ₹ 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதேபோல் 15 லட்சத்துக்கும் மேலான ஆண்டு வருமானத்துக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ், FD வட்டி விகிதங்கள் உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News