Post Office Savings Scheme : சேமிப்பு என்பது எந்த காலத்திலும் ஒருவரது வாழ்க்கை கைக்கொடுக்கும். அந்த சேமிப்பு, அதோடு நின்று விடாமல் ஒரு விஷயத்தில் முதலீடாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அது இரட்டிப்பாக மாறும். அதை பாதுகாப்பான விதத்தில் முதலீடு செய்ய வேண்டும். அனைவருக்குமே அவர்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை நல்ல திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று யோசிப்பர். அப்படி, மக்களுக்கு நன்மை பயக்கும் சில திட்டங்களை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்:


மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்கள் சில இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம். இதில், 8 சதவிகிதத்திற்கும் மேலாக முதலீட்டில் இருந்து வட்டி கிடைக்கும். சொல்லப்போனால், இது வைப்பு நிதி (Fixed Deposit) திட்டம் போன்றதாகும். 


சிறந்த 8.2 வட்டி விகிதம்:


சிறு சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் அலுவலகத்தில் ஒவ்வொரு வயதினருக்கும் வெவ்வேறு வகைகளில் மாறுபட்ட முறையில் செயல்படுத்தப்படுகின்றன, இதில் அரசாங்கமே முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மற்ற வங்கிகளில் எஃப்டியுடன் ஒப்பிடும்போது  போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் வட்டி தருவது மட்டுமின்றி, வழக்கமான வருமானத்தையும் உறுதிப்படுத்துகிறது, இதில் முதலீடு செய்வதன் மூலம், மாதம் ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம். அரசாங்கம், இந்த திட்டத்திற்காக கடந்த ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து 8.2 சதவிகித வட்டியை அளிக்கிறது. 


முதலீடு எவ்வளவு?


பாதுகாப்பான முதலீடு, வழக்கமான வருமானம் மற்றும் வரிச் சலுகைகளின் அடிப்படையில், அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் அஞ்சல் துறையின் மிகவும் விருப்பமான திட்டங்களின் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் கணக்கு தொடங்கப்படுவதன் மூலமாக, குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயில் இருந்து முதலீட்டினை தொடங்கலாம். 


மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... விதிகள் கூறுவது என்ன..!!


இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த அஞ்சல் அலுவலகத் திட்டம் ஓய்வுக்குப் பிறகு வழக்கமான மாத வருமானத்தை பெறுவதற்கு உதவும். இந்த திட்த்தில், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் தொடங்கலாம். 


5 ஆண்டு திட்டக்காலம்:


இந்த திட்டத்தில் 5 வருடம் வரை முதலீட்டு தொகையை வைத்திருக்கலாம். 5 வருடங்களுக்குள் இந்த கணக்கை முடிக்க நினைத்தால், இதற்கான அபராத தொகை வழங்கப்படுகிறது. இதை, அருகில் இருக்கும் தபால் அலுவலகத்தில் கூட தொடங்கலாம். வி.ஆர்.எஸ் வாங்கும் வயதில் இருப்பவர்கள் 55 வயதில் இருந்து 60 வயது வரை இருப்பர். இவர்கள் அனைவருமே கணக்கு தொடங்கலாம். 


20 ஆயிரம் வரை வருமானம்..


இந்த திட்டத்தில் 1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்ய தொடங்கலாம். இதில் 30 லட்சம் வரை முதலீடு செய்ய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இருந்து 20000 ரூபாய் வருமானத்தை கணக்கிட்டால், 8.2 சதவீத வட்டியில், ஒருவர் சுமார் 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், அவருக்கு ஆண்டு வட்டியாக 2.46 லட்சம் வரை கிடைக்கும். 


மேலும் படிக்க | அள்ளித்தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்.. டபுள் வருமானம், லிஸ்ட் இதோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ