Top 5 Government Schemes For Women:நாட்டு மக்களுக்காக மோடி அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
பல வகையான சேமிப்புத் திட்டங்கள் இந்திய அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன. இந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்து கோடிக்கணக்கான மக்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். தபால் அலுவலகமும் இந்திய அரசாங்கமும் பெண்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பெண்கள் பயன்பெறக்கூடிய அந்த அரசாங்கத் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். அவற்றில் தங்களுக்கு ஏற்ற திட்டங்களில் பெண்கள் கணக்கை திறந்து பயன் பெறலாம்.
பெண்களுக்கான அரசின் நலத்திட்டங்களை தபால் நிலையங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதில் பிபிஎஃப், மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் ஆகியவை அடங்கும்.
முதலீடு செய்வதற்கு பிபிஎஃப் ஒரு நல்ல வழியாகும். இத்திட்டத்தில், அரசு 7.1 சதவீத வட்டியை வழங்குகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் வரிவிலக்கின் பலனும் உள்ளது.
2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் 2023 திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில், பெண்கள் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கால அளவு 2 ஆண்டுகள்.
இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்காகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 10 வயது வரையிலான பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு துவங்கலாம். இதில் ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். தற்போது அதற்கு 8 சதவீத வட்டியை அரசு வழங்கி வருகிறது.
இந்த திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் தொகையை டெபாசிட் செய்யலாம். இந்த டெபாசிட்டுக்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் ஐந்து வருட காலத்திற்கு இதில் முதலீடு செய்யலாம்.
இது தவிர, தபால் நிலையத்தின் நேர வைப்புத் திட்டத்திலும் பணத்தை முதலீடு செய்யலாம். இதற்கு 7.5 சதவீத வட்டியை அரசு தருகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.