Post Office MIS Scheme: பாதுகாப்பு என்ற கோணத்தில் பெரும்பாலானோரின் முதல் தேர்வு தபால் அலுவலக திட்டம் ஆகும். அது மட்டுல்ல, தபால் அலுவலக திட்டத்தில் நல்ல வட்டியும் கிடைக்கும். அந்த வகையில் தபால் அலுவலகத்தின் சூப்பர் ஹிட் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தத் திட்டத்தின் கீழ் (Post Office MIS Scheme Benefits) நீங்கள் ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்ய தால் போது, பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக வட்டிப் பணத்தைப் பெறுவீர்கள். முதிர்ச்சியடையும் போது, ​​மொத்தத் தொகையும் திரும்பப் கிடைக்கும்.


இந்த அஞ்சல் அலுவலகத் திட்டம்- தபால் அலுவலக மாதாந்திர வருமான சேமிப்பு (MIS) திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 மற்றும் 100 மடங்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். இதில் அதிகபட்சமாக 4.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம். இந்த வரம்பு ஒற்றைக் கணக்கிற்கானது . அதே சமயம், கூட்டுக் கணக்கிற்கான அதிகபட்ச வரம்பு ரூ.9 லட்சம். இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் மூன்று பேர் கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். 
மேலும், மைனராக இருக்கும் குழந்தைக்களுக்கும் அவரது பெற்றோரின் பெயரில் கணக்கு தொடங்கலாம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தையின் பெயரிலும் தபால் அலுவலக எம்ஐஎஸ் கணக்கைத் திறக்கலாம்.


மேலும் படிக்க | Investment Tips: இந்த தவறுகளை தவிர்த்தால் கை நிறைய லாபம் காணலாம்


குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யலாம்


இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் குறைந்த பட்சமாக 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். தற்போது, ​​6.6 சதவீத வட்டி விகிதம் அடிப்படையில் கிடைக்கும். வட்டி ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆனால், கணக்கு வைத்திருப்பவர் இதில் மாதாந்திர வட்டியைக் கோரவில்லை என்றால், இந்தப் பணத்திற்கான கூடுதல் வட்டியின் பலனை அவர் பெறமாட்டார்.


முதிர்வு காலம் 5 வருடம்


இந்த தபால் அலுவலக திட்டத்தின் முதிர்வு 5 ஆண்டுகள் ஆகும். இந்தக் கணக்கைத் திறந்து ஒரு வருடம் வரை நீங்கள் பணத்தை எடுக்க முடியாது. நீங்கள் அதை 1-3 ஆண்டுகளுக்குள் மூட விரும்பினால், உங்கள் அசல் தொகையில் 2% கழிக்கப்படும். அதே நேரத்தில், 3-5 ஆண்டுகளுக்குள் கணக்கை மூடுவதற்கு 1 சதவீதம் அபராதம் கழிக்கப்படும்.


4.5 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் 2475 ரூபாய்


இந்தக் கணக்கில் யாராவது ஒருமுறை 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால், அவருக்கு ஒவ்வொரு மாதமும் 275 ரூபாய் அதாவது ஐந்தாண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3300 ரூபாய் கிடைக்கும். அதாவது ஐந்து வருடங்களில் மொத்தமாக 16500 ரூபாய் வட்டியாகக் கிடைக்கும். அதேபோல், ஒருவர் 1 லட்சத்தை டெபாசிட் செய்தால், அவருக்கு மாதம் ரூ.550,  அதாவது ஆண்டுக்கு ரூ.6600, ஐந்தாண்டுகளில் ரூ.33000 கிடைக்கும். இந்தத் திட்டத்தில், 4.5 லட்சத்தை டெபாசிட் செய்தால் மாதம் ரூ.2475, ஆண்டுக்கு ரூ.29700 மற்றும் ஐந்தாண்டுகளில் வட்டியாக ரூ.148500 கிடைக்கும்.


இந்த சிறந்த திட்டத்தில், ஒரு கணக்கு வைத்திருப்பவர் முதிர்வுக்கு முன் இறந்துவிட்டால், இந்தக் கணக்கு மூடப்படும். அத்தகைய சூழ்நிலையில் அசல் தொகை நாமினிக்கு திருப்பித் தரப்படுகிறது. இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்தால், பிரிவு 80C-ன் கீழ் வருமான வரி விலக்கின் பலன் கிடைக்காது. அஞ்சலகத்திலிருந்து பணம் எடுக்கும்போது அல்லது வட்டி வருமானத்தில் டிடிஎஸ் கழிக்கப்படுவதில்லை. இருப்பினும், இந்த வட்டி வருமான வரிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி: ஆர்பிஐ-ன் பெரிய அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR