Investment Tips: இந்த தவறுகளை தவிர்த்தால் கை நிறைய லாபம் காணலாம்

Investment Tips:கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யும்போது, முதலீட்டாளர்கள் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், தவறுகளை தவிர்க்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2022, 04:40 PM IST
  • பணத்தை பாதுகாப்பான மற்றும் நல்ல இடங்களில் முதலீடு செய்து, அதிக வருமானம் பெறுவது அனைத்து முதலீட்டாளர்களின் கனவாகவும் உள்ளது.
  • சிலர் அதிக அளவு வருமானம் பெறுவதில் வெற்றி அடைகிறார்கள்.
  • சிலரால் அது முடிவதில்லை.
Investment Tips: இந்த தவறுகளை தவிர்த்தால் கை நிறைய லாபம் காணலாம் title=

பணத்தை பாதுகாப்பான மற்றும் நல்ல இடங்களில் முதலீடு செய்து, அதிக வருமானம் பெறுவது அனைத்து முதலீட்டாளர்களின் கனவாகவும் உள்ளது. சிலர் அதிக அளவு வருமானம் பெறுவதில் வெற்றி அடைகிறார்கள். சிலரால் அது முடிவதில்லை. 

சில சமயங்களில் பண முதலீட்டில் சில தவறுகள் நடப்பதாகவும், அது வருமானத்தை பாதிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யும்போது, முதலீட்டாளர்கள் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், தவறுகளை தவிர்க்க வேண்டும். முதலீடு செய்யும்பொது முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான தவறுகளை பற்றி ஃபின்சேஃப் நிறுவனர் பிரதிபா கிரிஷ் கூறும் கருத்துகளை இந்த பதிவில் காணலாம்.

1. பணவீக்கத்தை கணக்கிடாமல் இருப்பது

- பணவீக்கத்தையும் (investment and inflation) கணக்கில் கொண்டு சரியான தொகையை கணக்கிடுங்கள்.
- ஓய்வு பெறும்போது ₹ 50 ஆயிரம் வருமானம் என்பது இன்றைய நிலவரப்படி சரியானதாக இருக்கும்.
- பணவீக்கத்தை சேர்த்த பின் தொகை போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்.
- 7% பணவீக்க விகிதத்தில் 65 ஆண்டுகளுக்கு 70 ஆயிரம் வருமானம் தேவைப்படும்.
- 70 வயது வரை மாத வருமானம் ரூ.1 லட்சம் தேவைப்படும்.

மேலும் படிக்க | எளிதாக கடன் வழங்கும் சிறந்த ஆன்லைன் ஆப்ஸ்! 

2. இலக்கு இல்லாமல் முதலீடு செய்தல்

- எப்போதும் ஒரு இலக்குடன் முதலீடு செய்யுங்கள்.
- ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகள் இருக்கும்.
- இந்த இலக்குகளை மனதில் கொண்டு முதலீடு செய்யுங்கள்.
- குறுகிய கால இலக்குகளுக்கு அதற்கேற்ப முதலீடு செய்யுங்கள்.
- நீண்ட காலத்திற்கு அதற்கேற்ப நிதியைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது நல்லது.
- கார், வீடு, விடுமுறைக்கு நிதி திரட்டுங்கள்.
- குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான இலக்குகளை உருவாக்குங்கள்.
- ஓய்வூதியத்திற்கான இலக்குகளை முன்கூட்டியே நிர்ணயிப்பது நல்லது.

3. உத்தரவாதமான வருமானத்தை எதிர்பார்ப்பது

- வருமானம் ஈட்ட வேண்டும் என்ற பேராசைக்காக முதலீடு செய்யாதீர்கள்.
- பணம் சம்பாதிக்க எந்த குறுக்குவழியும் இல்லை.
- சந்தையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
- சந்தை நகர்வுகளால் வருமானம் பாதிக்கப்படுகிறது.
- முதலீடு நீண்டதாகவும் இலக்கு அடிப்படையிலானதாகவும் இருந்தால், இழப்பு குறைவாக இருக்கும்.

4. காப்பியடித்தல் கூடாது

- முதலீட்டில் மற்றவர்களை காப்பியடிக்க வேண்டாம்
- உயரும் சந்தையில் முதலீடும், வீழ்ச்சியடைந்த சந்தையில் லாபம் காண முயற்சிப்பதும் சரியல்ல.
- மற்றவரை காப்பியடித்தால் நஷ்டம் ஏற்படலாம். அனைவரது முதலீட்டு அளவும் இலக்குகளும் வெவ்வேறாக இருக்கும். 
- சந்தை ஏறினாலும் சரி, சரிந்தாலும் சரி உங்கள் உத்தியின்படி முதலீடு செய்யுங்கள்.

5. செயல்திறனைப் பார்த்து நிதிகளில் முதலீடு செய்தல்

- முதலீடு செய்வதற்கு முன் அந்த நிறுவனத்தின், மியூசுவல் ஃபண்டுகளின் லாபத்தைப் பார்ப்பது மட்டும் போதாது. 
- ஃபண்டின் ஃபேக்ட் ஷீட்டில் இருந்து, மியூசுவல் ஃபண்டை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
- மியூசுவல் ஃபண்ட் உங்கள் இலக்குகள் மற்றும் முதலீட்டு நோக்கத்துடன் பொருந்த வேண்டும்.
- மியூசுவல் ஃபண் ஃபேக்ட் ஷீட்டில் ஃபண்ட் பற்றிய முழுமையான தகவல்கள் இருக்கும்.
- தேவைப்பட்டால் நிதி ஆலோசகரின் உதவியைப் பெறுங்கள்.

மேலும் படிக்க | பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற சில டிப்ஸ்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News