வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி: ஆர்பிஐ-ன் பெரிய அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

Home Loan: இந்திய ரிசர்வ் வங்கி வீடுகளை கட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் கடன் வரம்பை அதிகரித்துள்ளது. இப்போது கூட்டுறவு வங்கிகள் 1.40 கோடி வரை கடன் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 8, 2022, 05:53 PM IST
  • ஆர்பிஐ எம்பிசி முக்கிய செய்திகள்.
  • இனி நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (யுசிபி) இனி ரூ. 1.40 கோடி வரை வீட்டுக் கடன் வழங்க முடியும்.
  • இதுவரை இந்த வரம்பு ரூ.70 லட்சமாக இருந்தது.
வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி: ஆர்பிஐ-ன் பெரிய அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி title=

ஆர்பிஐ எம்பிசி முக்கிய செய்திகள்: ஆர்பிஐ தனது 3 நாள் ஆய்வுக் கூட்டத்தில் பல பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. இப்போது நீங்கள் உங்கள் கனவு வீட்டை எளிதாகக் கட்டலாம். 

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வீடுகளை கட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் கடன் வரம்பை அதிகரித்துள்ளது. இப்போது கூட்டுறவு வங்கிகள் 1.40 கோடி வரை கடன் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2011-ம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளுக்கான கடன் வரம்பு தொடர்பாக திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு டோர் ஸ்டெப் அதாவது இருக்கும் இடத்திலேயே கடன் வழங்கப்படும் வசதியை குறித்து தெரிவிக்கப்பட்டது. இது தவிர, ரிசர்வ் வங்கி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

1.40 கோடி வரை கடன் கிடைக்கும்

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், நிதிக் கொள்கை மதிப்பாய்வை வெளியிடுகையில், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (யுசிபி) இனி ரூ. 1.40 கோடி வரை வீட்டுக் கடன் வழங்க முடியும் என தெரிவித்தார். இதுவரை இந்த வரம்பு ரூ.70 லட்சமாக இருந்தது. இதுதவிர இதுவரை ரூ.30 லட்சமாக இருந்த ஊரக கூட்டுறவு வங்கியில் இனி ரூ.75 லட்சம் வரை கடன் பெறலாம்.

மேலும் படிக்க | RBI: மீண்டும் உயர்ந்த ரெப்போ விகிதம், இஎம்ஐ எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோ 

நகர்ப்புறத்தில் இரண்டு பிரிவுகள்

நகர்ப்புறங்கள் டயர் 1 மற்றும் டயர் 2 என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ், கடன் வரம்பு கடன் பெறுபவர்களின் வீடி அமையப்போகும் இடத்தின் வகையைப் பொறுத்தது.

கிராமப்புற கூட்டுறவு வங்கி விதிகள்

- கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் (மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்) மற்றும் அவற்றின் நிகர மதிப்பு அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பை நிர்ணயிக்கும். புதிய விதியின்படி, 100 கோடி ரூபாய் வரை நிகர மதிப்புள்ள வங்கிகள் ஒவ்வொரு நபருக்கும் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க முடியும். இதன் முந்தைய வரம்பு 20 லட்சமாக இருந்தது. மீதமுள்ள வங்கிகள் ரூ.75 லட்சம் வரை கடன் தரலாம்.

- இதுதவிர, இதுவரை அங்கீகரிக்கப்படாத வீட்டு மனை திட்டங்களுடன் தொடர்புடைய பில்டர்களுக்கு கடன் வழங்க கிராமிய கூட்டுறவு வங்கி அனுமதிக்கப்படும்.

- இது மட்டுமின்றி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், ஷெட்யூல்டு வங்கிகள் போன்று வாடிக்கையாளர்களுக்கு டோர் ஸ்டெப் அதாவது வீட்டுக்கே சென்று வசதியை வழங்குமாறு நகர்ப்புற கூட்டுறவு வங்கியை ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | ரெப்போ விகிதத்தை 0.50% உயர்த்தியது RBI; EMI சுமை அதிகரிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News