PPF Account: பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) பணத்தைச் சேமிப்பது என்பது நீண்ட கால மற்றும் ஆபத்து இல்லாத முதலீட்டு வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.  இருப்பினும் பிபிஎஃப் கணக்கு 15 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முதிர்ச்சியடைகிறது, பிபிஎஃப் தற்போது தனது முதலீட்டாளர்களுக்கு 7.1 சதவீத வட்டியினை தருகிறது.  பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) விதிமுறைகளின்படி, ஒரு சந்தாதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்க முடியாது.  ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகளைத் திறக்கிறார்கள்.  நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஆன்லைனில் பிபிஎஃப் கணக்கை திறப்பதற்கான விருப்பத்தை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ பிபிஎஃப் கணக்கை ஆன்லைனில் திறப்பதற்கான வழிகள்:


1) உங்கள் எஸ்பிஐ ஆன்லைன் கணக்கைத் திறக்கவும்.


2) 'கோரிக்கை மற்றும் விசாரணைகள்' என்கிற டேப்பை தேர்ந்தெடுக்கவும்.


3) இப்போது, ​​'புதிய பிபிஎஃப் கணக்குகள்' என்கிற பட்டனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும்.


4) பின்னர் 'புதிய பிபிஎஃப் கணக்கு' என்கிற பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு உங்கள் பான் எண் கட்டப்படும்.


5) நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கைத் திறக்க விரும்பும் உங்கள் வங்கிக் கிளையின் விவரங்களை வழங்கவும்.


6) முகவரி மற்றும் நாமினேஷன் போன்ற தனிப்பட்ட தகவல்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.  சரிபார்ப்பு முடிந்ததும், தொடர என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | Post Office Scheme: வெறும் ரூ.10,000 டெபாசிட் செய்து, ரூ.16 லட்சத்தை இந்தத் திட்டத்தில் பெறுங்கள்!


7) 'உங்கள் படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது' என்ற செய்தியுடன் ஒரு டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.


8) ஆதார் எண் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தை நீங்கள் டவுன்லோடு செய்ய வேண்டும்.


9) 'பிபிஎஃப் ஆன்லைன் விண்ணப்பத்தை அச்சிடு' என்பதைத் தேர்ந்தெடுத்து படிவத்தை அச்சிட வேண்டும்.


10) படிவம் மற்றும் புகைப்படங்களுடன் 30 நாட்களுக்குள் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும்.


பிபிஎஃப் கணக்கு முதிர்ச்சியடையும் போது நீங்கள் தேர்வு செய்யவேண்டிய ஆப்ஷன்கள்:


1) பிபிஎஃப் இருப்பு திரும்பப் பெறுதல்.


2) முதலீடு இல்லாமல் பிபிஎஃப் கணக்கை நீட்டிப்பு செய்தல்.


3) முதலீட்டு விருப்பத்துடன் பிபிஎஃப் கணக்கை நீட்டிப்பு செய்தல்.


பிபிஎஃப் கணக்கு பற்றிய முக்கியமான தகவல்கள்:


1) ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ 500 மற்றும் அதிகபட்ச வைப்புத் தொகை ரூ 1,50,000.


2) 3-வது நிதியாண்டு முதல் 6-வது நிதியாண்டு வரை கடன் வசதி கிடைக்கும்.


3) 7-வது நிதியாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.


4) கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டின் இறுதியில் இருந்து பதினைந்து முழுமையான நிதியாண்டுகள் நிறைவடைந்தவுடன் கணக்கு முதிர்ச்சியடைகிறது.


5) கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகு, கூடுதல் வைப்புத்தொகையுடன் 5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டித்து கொள்ளலாம்.


6) நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்துடன் முதிர்வுக்குப் பிறகு மேலும் டெபாசிட் இல்லாமல் கணக்கை காலவரையின்றி வைத்திருக்க முடியும்.


7) பிபிஎஃப் கணக்கில் உள்ள தொகையானது நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது ஆணையின் கீழ் இணைக்கப்படாது.


8) ITAct-ன் பிரிவு 80-C இன் கீழ் டெபாசிட் கழிக்கத் தகுதி பெறுகிறது .


9) ITAct இன் பிரிவு -10 இன் கீழ் கணக்கில் பெறப்படும் வட்டி வருமான வரியிலிருந்து இலவசம்.


மேலும் படிக்க | ஜாக்பாட் திட்டம்... மலிவு விலையில் மருந்துகள் - கூடவே வேலைவாய்ப்பும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ