Currency News Update: சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் திரும்ப பெற இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளது. அதன் பிறகு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குறித்து பல வகையான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குறித்து இன்று காலை ரிசர்வ் வங்கி கவர்னர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பிற்கு பிறகும், சமீப காலமாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்ட பிறகும் மக்கள் மனதில் பலவிதமான கவலைகள் காணப்படுகின்றன.
சக்திகாந்த தாஸ் சொன்னது என்ன?
ரூ.500 நோட்டை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உறுதியாக தெரிவித்துள்ளார். அது முழுவதுமாக புழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனுடன், தற்போது 1000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி மீண்டும் வெளியிடப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அரசிடம் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்றார்.
மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! ஜூன் 10 முதல் ரயில்களில் பெரும் மாற்றம்
திரும்பி வந்த ரூ. 2000 நோட்டுகள்
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில்,"2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை ரூ.3.62 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இதுவரை ரூ.1.80 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் திரும்பி வந்துள்ளன. 2000 ரூபாய் நோட்டுகளில் 85 சதவீதம் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுவதாகவும், மீதமுள்ள நோட்டுகள் பிற நோட்டுகளாக மாற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
2016ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு பணப் பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.2000 நோட்டு கொண்டுவரப்பட்டது. இதனுடன் அப்போது புதிய 500 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன.
வங்கிக்குச் சென்று நோட்டுகளை மாற்றலாம்
2,000 ரூபாய் நோட்டை வைத்திருக்கும் எவரும் அதை தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம் அல்லது வங்கியில் உள்ள வேறு எந்த நோட்டிற்கும் அதை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். ரூ.2,000 நோட்டுகளை மாற்ற தேவையான ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பெரும்பாலான ரூ.2,000 நோட்டுகள் திரும்ப வந்துவிடும் என்று நம்புகிறோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
43ஆவது நிதிக் கொள்கை மீளாய்வுக் கூட்டத்தில் (எம்பிசி கூட்டம்) இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அடிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் பழைய நிலையிலேயே தொடர்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, ஏப்ரல் மாதம் நடைபெற்ற எம்பிசி கூட்டத்தில், ரெப்போ விகிதம் 6.5 சதவீத அளவில் அப்படியே தக்கவைக்கப்பட்டது.
மேலும் படிக்க | RBI அளித்த ஜாக்பாட் செய்தி: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. மக்களுக்கு நிம்மதி!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ