PPF Withdrawal Rules: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) நீண்ட கால பலன்களுடன் ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாக உள்ளது. உங்களிடம் PPF கணக்கு இருந்தால், உங்கள் பிபிஎஃப் கணக்கிலிருந்து முழுப் பணத்தையும் திரும்பப் பெற முடியும். இருப்பினும், ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்க நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள்.  குறிப்பிட்ட சூழ்நிலையில் ஐந்து நிதியாண்டுகளுக்குப் பிறகு உங்கள் பிபிஎஃப் கணக்கை முன்கூட்டியே மூடலாம்.  உங்கள் பிபிஎஃப் பணத்தை பாதி அளவு அல்லது முழுவதும் திரும்ப பெற, நீங்கள் பிபிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட அந்தந்த வங்கி அல்லது அஞ்சல் அலுவலகக் கிளையில் படிவம் C ஐ சமர்ப்பிக்க வேண்டும். பிபிஎஃப் பணத்தை திரும்பப் பெற சில எளிய வழிகள்: 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Budget 2024: வரிசெலுத்துவோருக்கு நல்ல செய்தி.... காத்திருக்கும் வரிச் சலுகைகள், விலக்குகள்


- முதலில் பிபிஎஃப் பணத்தை திரும்பப் பெறுவதற்கான படிவம் C ஐ வங்கி/அஞ்சலகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வது அல்லது வங்கி/அஞ்சல் அலுவலக கிளையில் இருந்து பெறவும்.


- பிறகு படி படிவம் C ஐ நிரப்பு, உங்கள் பிபிஎஃப் கணக்கு எண், எவ்வளவு பணம் திரும்பப் பெற விரும்புகிறீர்கள் மற்றும் கணக்கு செயலில் உள்ள கால அளவு ஆகியவற்றை எழுத வேண்டும். மைனரின் பிபிஎஃப் கணக்கிலிருந்து திரும்பப் பெறுவதற்கு, மைனரின் பெயரைச் சேர்க்கவும். படிவத்தில் கேட்கப்பட்டுள்ளபடி தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்வது அவசியம்.


- விண்ணப்பப் படிவத்துடன் பிபிஎஃப் பாஸ்புக்கை இணைத்து, வருவாய் முத்திரையை ஒட்டி, கையெழுத்திட வேண்டும்.  பிறகு படிவம் C மற்றும் பிற தேவையான ஆவணங்களை வங்கி கிளை அல்லது தபால் நிலையங்களில் சமர்ப்பியுங்கள்.  


- அலுவலரின் சரிபார்பிற்பு பிறகு, உங்கள் பணம் நேரடியாக உங்கள் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும் அல்லது அதற்கான செக் உங்களுக்கு வழங்கப்படும்.  


PPF பணத்தை எடுக்கும் காரணம்


குறிப்பிட்ட சில காரணங்களுக்காக நீங்கள் PPF கணக்கிலிருந்து பாதியளவு பணத்தை திரும்பப் பெறலாம், எனவே நீங்கள் பணத்தை திரும்பப் பெறக் கோருவதற்கு முன் என்ன காரணங்களுக்காக பணத்தை எடுக்க விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருப்பது அவசியம்.  உயர்கல்விக்கு நிதியளிப்பது, மருத்துவச் செலவுகள், வீடு வாங்குவது அல்லது கட்டுவது, உங்கள் குழந்தைகளின் திருமணச் செலவுகளை ஈடுகட்டுவது போன்ற காரணங்களுக்காக பணத்தை பெறலாம்.


PPF பணத்தை எடுக்க ஐந்து விதிகள்


- ஒரு பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர், திட்டத்தின் முதிர்ச்சியின் போது, ​​அதாவது 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு மட்டுமே கணக்கில் உள்ள பணத்தை முழுமையாக திரும்பப் பெற முடியும்.


- நிதி நெருக்கடி ஏற்பட்டால், கணக்கு தொடங்கிய ஏழாவது ஆண்டிலிருந்து பகுதியளவு பிபிஎஃப் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.


- பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறலாம், ஆனால் பிபிஎஃப் கணக்கு தொடங்கி நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு மட்டுமே அவ்வாறு செய்யத் தகுதியுடையவர்.


- ஒருவர் தனது கணக்கை மூட விரும்பவில்லை என்றால், அவர் பிபிஎஃப் திட்டத்தில் எந்த பங்களிப்பையும் செய்யாமல் செயலில் வைத்திருக்க முடியும். அத்தகைய சூழ்நிலையில், வட்டி விகிதம் மூடப்படும் வரை மீதமுள்ள தொகையுடன் சேர்த்துக் கொண்டே இருக்கும். கணக்கு வைத்திருப்பவர் ஒரு நிதியாண்டுக்கு ஒருமுறை எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுக்கலாம்.


- பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் பங்களிப்புகளுடன் தனது கணக்கை செயலில் வைத்திருக்க விரும்பினால், அவர் ஐந்தாண்டு அடிப்படையில் நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிக்க | Budget: 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருப்பவர்களுக்கு பட்ஜெட்டில் ஸ்வீட் நியூஸ்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ