இன்றும், இந்தியாவில் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு அதிக செலவு செய்கிறார்கள். ஆகவே வருமானம் அதிகமாக கிடைக்கும் திட்டங்களில் பெற்றோர் முதலீடு செய்ய விரும்புகின்றனர். பெண் குழந்தைகளின் படிப்பு மற்றும் பாதுகாப்புக்கான திட்டமான ‘பேடி பசாவோ பேடி படாவோ’ திட்டத்தின் கீழ், ஜனவரி 2015-ல் 'சுகன்யா சம்ரித்தி யோஜனா' தொடங்கப்பட்டது. இன்று இது பெண் குழந்தைகளுக்கான மிகச் சிறந்த திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த சூழலில், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் பிபிஎஃப் ஆகியவற்றில், மிகவும் நன்மை பயக்கும் திட்டம் எது என்ற கேள்வி எழுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவர் முதலீடு செய்யும் மனநிலையில் இருந்தால், அவர் தனது அனைத்து பணத்தையும் சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் போடக்கூடாது. தொகையின் ஒரு பகுதியை பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்ய வேண்டும். சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் 7.6 சதவீதம் வட்டி கிடைக்கிறது. ஆனால் பிபிஎஃப் (PPF) வட்டி விகிதம் 7.1 சதவீதம் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் வட்டி விகிதம் திருத்தப்படுகிறது.


நிதி நிபுணர் பார்வராஜின் கூற்றுப்படி, பிபிஎஃப் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா, இரண்டுக்கும் இடையே ஒருவர் தேர்வு செய்ய வேண்டுமானால், சுகன்யா சம்ரித்தி யோஜனாவைத் தேர்வு செய்வதே நல்லது. ஏனெனில் இதில் பிபிஎப்பை விட அதிக வருமானம் கிடைக்கும். 'நீங்கள் பிபிஎப்பில் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், அது உங்களுக்கு சிறந்த வருமானத்தை அளிக்கும். ஆகையால் அனைவரும் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை பிபிஎபிலும் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டும்.’ என்று அவர் கூறினார்.


ALSO READ: உங்களிடம் வெறும் 500 ரூபாய் இருந்தா போதும், நீங்க தான் அடுத்த கோடீஸ்வரர்!!


சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ், ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கைத் தொடங்கலாம். மாதா மாதம் அல்லது வருடாந்திர முறையில் தவணைகளை செலுத்தலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய முடியாது. ஆனால் நீங்கள் தொடர்ந்து வட்டியை பெறுவீர்கள். எனினும், பெண் குழந்தைக்கு 18 வயதானவுடன்தான் பணத்தை திரும்பப் பெற முடியும். பிபிஎஃப் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனாவிற்கு 80C-யின் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது.


ALSO READ: உங்கள் மகளுக்கு "சுகன்யா" திட்டத்தை வழங்குங்கள்; 21 ஆண்டுகளுக்குப் பிறகு பணக்காரர் ஆவார்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR