EPFO Advance Service Stopped : பணிபுரிபவர்கள், தங்கள் அவசர தேவைகளுக்காக அவர்களின் PF கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக பெறலாம் என்ற வசதியை இபிஎஃப் முகமை நிறுத்திவிட்டது. நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையானது, அவர்களின் PF கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகையானது தொழிலாளர்களின் வருங்காலத்தில் பெரிதும் பயன்படும். தொழிலாளர்களின் ஓய்வூதிய காலத்தில் இந்த தொகையை மொத்தமாக பெறும்போது, ஒரு பெரும் தொகை கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிட் காலத்தில் முன்பணம் எடுக்க அனுமதி


ஆனால் அவசர தேவைகளுக்காக பணியில் இருக்கும்போதே EPF நிதியில் இருக்கும் பணத்தை எடுக்கும் வசதியை EPFO கோவிட் தொற்றுநோய்க் காலத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால், ஜூன் 12 தேதியிட்ட EPFO ​​சுற்றறிக்கையின்படி, கோவிட் இனி ஒரு தொற்றுநோய் அல்ல என்பதால், பி.எஃப் முன்பணம் தரும் வசதியை உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது, இந்த விதிமுறை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரியவந்துள்ளது.


பிஎஃப் முன்பணம்


2022-23 ஆம் ஆண்டிற்கான EPFO ​​இன் வரைவு ஆண்டு அறிக்கையின்படி, 2020-21 முதல் மூன்று நிதியாண்டுகளில் 22 மில்லியனுக்கும் அதிகமான அல்லது EPFO ​​இன் மொத்த சந்தாதாரர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் முன்பணம் வாங்கியதில் ₹48,075.75 ரூபாய் அளவிலான பெரும்தொகையை வாங்கியுள்ளனர்.  


மேலும் படிக்க | வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்!


கொரோனா வைரஸால் ஏற்பட்ட கோவிட் தொற்றுநோயின் முதல் அலையின் போது EPFO, சந்தாதாரர்கள் முன்பணம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியது. அதேபோல கோவிட் இரண்டாவது அலையின் போது மே 31, 2021 அன்று இரண்டாவது முறையாக அதை நீட்டித்து அனுமதித்தது. . இதன் கீழ், EPFO ​​சந்தாதாரர்கள் மூன்று மாதங்களுக்கான  அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அளவிலான  முன்பணத்தைப் பெறலாம் என்று விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்படது.  


இந்த முன்பணம் பெறும் வசதி எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் என்று ஊகங்கள் இருந்துவந்த நிலையில், மத்தியில் புதிய அரசு பதவியேற்ற பிறகு முன்பணம் பெறுவதை நிறுத்துவதாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு EPFO, சந்தாதாரர்களின் உரிமைகோரல்கள் உட்பட அனைத்துக் கோரிக்கைகளுக்கும் துரிதமாக செட்டிமெண்ட் செய்யும் வகையில் புதிய கணக்கியல் முறையை அறிமுகப்படுத்துவதாகவும் அறிவித்திருக்கிறது. இதில் ஒவ்வொரு சந்தாதாரருக்கும் UAN அடிப்படையிலான ஒற்றைக் கணக்கியல் முறையை அறிமுகப்படுத்துவது நடைமுறைகளை எளித்தாக்கும்.


மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தின் (Centre for Development of Advanced Computing, CDAC) ஆலோசனையுடன், இதற்கான புதிய மென்பொருள் உருவாக்கும் முயற்சிகளில் EPFO ஈடுபட்டுள்ளது. சமீப காலங்களில், இந்த அமைப்பு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சந்தாதாரர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்க EPFO பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மேற்கொள்ளும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, EPFO ​​உரிமைகோரல் தீர்வு ஆட்டோமேடிக் எனப்படும் தானியக்கமாகியுள்ளது. இதனால், உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிராகரிப்பது குறைந்துவிட்டது.  


மேலும் படிக்க | PPF: நடைமுறைகளை எளிதாக்கும் EPFO! வாடிக்கையாளர்களுக்கு இனி நோ பிராப்ளம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ