இன்றைய உலகில் பலருக்கும் அவசரமாக பணம் சேவைப்படும் போது வங்கி அல்லது ஏடிஎம் போன்றவற்றிற்குச் செல்ல நேரம் கிடைப்பது இல்லை. இதனை புரிந்து கொண்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இனி நீங்கள் பணத்தை எடுக்க ஏடிஎம் அல்லது வங்கிக்கு நேரடியாக செல்ல தேவையில்லை. உங்கள் வீட்டிற்கு பணம் தானாகவே வந்து சேரும். இது கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், ஆதார் ஏடிஎம் உதவியுடன் இது நடைமுறைக்கு வந்துள்ளது. தபால்காரர் கொரியரை வீட்டில் கொடுப்பது போல உங்கள் பணத்தை வீட்டில் டெலிவரி செய்வார். இந்தியன் போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் உங்களால் வங்கி அல்லது ஏடிஎமிற்கு செல்லாமல் பணத்தை எடுத்து கொள்ள முடியும்.
மேலும் படிக்க | இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? அப்போ ‘இதில்’ முதலீடு செய்யுங்கள்..
ஆதார் ஏடிஎம் என்றால் என்ன?
ஆதார் ஏடிஎம் சேவை என்றால் ஆதார் இயக்கப்பட்ட கட்டணச் சேவை (AePS) ஆகும். AePS ஐப் பயன்படுத்த, முதலில் உங்கள் வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இந்த ஆதார் ஏடிஎம் சேவையின் உதவியுடன், கணக்கு வைத்திருப்பவரின் பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி வங்கி சேவை வழங்கப்படுகிறது. ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்கல் தங்கள் பயோமெட்ரிக் விவரங்கள் மூலம், வீட்டில் இருந்தபடியே பணம் எடுப்பது, எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை பார்ப்பது, மினி ஸ்டேட்மென்ட் போன்ற அடிப்படை வங்கிச் சேவைகளின் வசதியை பெற முடியும்.
மேலும் இது மட்டுமின்றி இந்த ஆதார் சேவையின் மூலம் ஒரு வங்கி கணக்கில் இருந்து இன்னொரு வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி கொள்ள முடியும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மற்றொரு வங்கி கணக்கிற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்தியன் போஸ்ட் பேமென்ட் பேங்க் மூலம் உங்கள் வீட்டிற்குப் பணத்தை டெலிவரி செய்வதற்கு நீங்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் இந்த ஆதார் ஏடிஎம் சேவைக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
எப்படி இதனை பயன்படுத்துவது?
IPPB-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, Door Step என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். அதில் உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, முகவரி, பின் குறியீடு போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிடவும். பிறகு, உங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயரை உள்ளிடவும். அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு நான் ஒப்புக்கொள்கிறேன் என்பதை கிளிக் செய்து சமர்ப்பிக்கவும். சிறிது நேரம் கழித்து, தபால்காரர் உங்கள் வீட்டிற்கு பணம் கொண்டு வருவார்.
பரிவர்த்தனை விதிகள்
தவறான ஆதார் விவரங்கள் உள்ளிடப்பட்டாலோ அல்லது தவறான வங்கியைத் தேர்ந்தெடுத்தாலோ இந்த பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் சரியான வங்கியைத் தேர்வு செய்ய வேண்டும். உங்களது முதன்மைக் கணக்கிலிருந்து மட்டுமே தொகை டெபிட் செய்யப்படும். மைக்ரோ ஏடிஎம் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் உங்கள் பரிவர்த்தனையின் முடிவு குறித்து தெரிவிக்கப்படும்.
மேலும் படிக்க | சட்டவிரோத கடன் செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் ஆர்பிஐ! புதிய நடைமுறை விரைவில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ