Pradhan Mantri Awas Yojana: நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவும் ஒன்றாகும். இது ஏழை எளிய மக்களுக்கு வீட்டுவசதி அளிக்கும் ஒரு மிக முக்கிய திட்டமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (Pradhan Mantri Awas Yojana-Urban), அதாவது PMAY-U 2.0 -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வீடுகளை உருவாக்கித் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் முதலீடு ரூ.10 லட்சம் கோடி என்றும் இதற்கு ரூ.2.30 லட்சம் கோடி அரசு மானியம் வழங்கப்படும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


PMAY-Urban 2.0: இதன் மூலம் யார் பயனடைவார்கள்?


“குடிசைவாசிகள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தின் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். கூடுதலாக, துப்புறவுத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், கைவினை கலைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குடிசைகள்/சேரிகளில் வசிக்கும் மக்கள் ஆகியோரின் மீதும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு ஆதரவு அளிக்கப்படும்” என PM India இணையதளம் தெரிவித்துள்ளது.


PMAY-Urban 2.0: இதில் சேர்வதற்கான தகுதி என்ன?


இவர்களுக்கு இந்த திட்டத்தின் பலனைப் பெறுவதற்கான தகுதி உள்ளது:


- பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குடும்பங்கள் (EWS)
- குறைந்த வருமானம் கொண்ட மக்கள் (LIG)
- நடுத்தர வருமானக் குழுவில் உள்ள மக்கள் (MIG)
- நாட்டில் எங்கும் சொந்தமாக ஒரு பக்கா வீடு இல்லாத நபர்கள்


PMAY-Urban 2.0: தகுதியான நபர்களுக்கான வருமான அளவுகோல்கள்


EWS: இந்த பிரிவினருக்கு வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


3 முதல் 6 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட LIG குடும்பங்கள், ஆண்டு வருமானம் ரூ.6-9 லட்சம் உள்ள MIG குடும்பங்கள்.


பின்வரும் அம்சங்களின் மூலம் பெருநகரங்களில் உள்ள மலிவு விலை வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக PM India இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


1. பயனாளிகள் தலைமையிலான கட்டுமானம் (Beneficiary-Led Construction)
BLC -இல், தகுதியுடைய EWS குடும்பங்கள் தங்களுக்கு சொந்தமான காலி நிலத்தில் புதிய வீடுகளைக் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்படும். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் நிலமற்ற பயனாளிகளுக்கு நில உரிமைகளையும் (பட்டாக்கள்) வழங்கலாம்.


மேலும் படிக்க | பூஜ்ஜிய வரி..... நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்த முக்கிய தகவல்


2. பார்ட்னர்ஷிப்பில் மலிவு வீடுகள் (Affordable Housing in Partnership)
AHP -இல், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், நகரங்கள், பொது மற்றும் தனியார் ஏஜென்சிகளுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பட்ட வீடுகளுக்கு EWS பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. புதுமையான கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்படும் வீடுகளுக்கு ஒரு சதுர மீட்டர்/அலகுக்கு ரூ. 1,000 என்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மானியம் (TIG) போன்ற கூடுதல் மானியங்கள் வழங்கப்படும்.


3. மலிவு வாடகை வீடுகள் ( Affordable Rental Housing)
ARH வேலைக்கு செல்லும் பெண்கள், தொழில்துறை தொழிலாளர்கள், நகர்ப்புற புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற தகுதியான பயனாளிகளுக்கு வாடகை வீடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ARH வெர்டிகல் இரண்டு மாதிரிகள் மூலம் செயல்படுத்தப்படும்: 


- அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட தற்போதுள்ள காலியான வீடுகளைப் பயன்படுத்துதல் மற்றும் 
- புதிய வாடகை வீடுகளை நிர்மாணித்தல். 


புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்படும் வீடுகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 3,000 ரூபாய் TIG அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


4. வட்டி மானியத் திட்டம் (Interest Subsidy Scheme)


ISS வெர்டிகலில் EWS/LIG மற்றும் MIG குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 4 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகின்றது. இந்த மானியம் ஐந்து ஆண்டு தவணைகளில் வழங்கப்படும், இதில் வழங்கப்படும் அதிகபட்ச மானியம் ரூ 1.80 லட்சமாகும்.


மேலும் படிக்க | PF கணக்குகள், ஓய்வூதியம், TDS... நேரலை அமர்வில் முக்கிய அப்டேட்களை அளித்த EPFO


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ