Property Lease Rules and Regulations: உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இடமும் நமது வாழ்வின் இன்றியமையாத தேவைகள். இவை அனைத்துமே அவரவர் வசதிக்கு ஏற்ப மாறுபடும் விஷயங்கள். மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடான இந்தியாவில், வீடுகளுக்கான தேவை எப்போதும் உள்ளது. வாடகைக்கு வீடு தேடுபவர்களுக்கும், வீட்டை வாங்க நினைப்பவர்களுக்கும் எப்போதும் இங்கு பஞ்சமில்லை. அதுவும் கடந்த சில தசாப்தங்களில் வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக பெரிய நகரங்களில், வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளில் பெரிய நகரங்களில் வந்து குடிபுகும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் வேலை நிமித்தமாக இங்கு வந்தாலும், சிலர் பெரிய நகரங்களில் வசிக்கும் ஆசையிலும் வருகிறார்கள். அப்படி வரும் மக்களுக்கு சொந்த வீடு வாங்கும் கனவையும் நிஜமாக்கிக்கொள்ளும் ஆசை வருகிறது. வீட்டு கடன் என்ற விஷயம் இங்கு இவர்களுக்கு பெரிய அளவில் உதவுகிறது. வீட்டு கடன் மூலம் குறைந்த ஊதியம் உள்ளவர்களும் எளிதாக சொந்த வீடு வாங்க முடிகின்றது. 


நகரத்தில் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாள் சம்பாத்தியத்தை முதலீடு செய்து பிளாட் வாங்குகிறார்கள். அந்த பிளாட்டின் லீஸ் காலம் முடிவடைந்ததும் என்ன ஆகும்? 


நகரங்களில் வீடுகள் இரண்டு வழிகளில் விற்கப்படுகின்றன:
- ஒன்று 99 வருட லீஸ் (Leasehold Property)
- மற்றொன்று நிரந்தர உரிமை (Freehold Property)


முதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ஒருவர் ஒரு வீட்டை வாங்கினால், லீஸ் காலம், அதாவது குத்தகை காலம் முடிவடைந்தவுன் அந்த வீடு உங்களுக்கு சொந்தமாக இருக்காதா? விதிகள் என்ன கூறுகின்றன?


Leasehold Property, Freehold Property: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?


சொத்து வாங்குபவர்கள், இதில் இரண்டு வகைகள் உள்ளன என்பதை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். 
- ஃப்ரீஹோல்ட் மற்றும்
- லீஸ்ஹோல்ட்


ஃப்ரீஹோல்டு சொத்து: இதில் சொத்து வாங்கியவரை தவிர வேறு எந்த நபருக்கும் சொத்தின் மீது எந்த உரிமையும் இருக்காது. சொத்து வாங்குபவருக்கு அந்த நிலம் மற்றும் வீட்டின் முழு உரிமையும் நிரந்தரமாக இருக்கும், மேலும் அவர் விருப்பப்படி அதை மாற்றவோ விற்கவோ முடியும்.


லீஸ்ஹோல்ட் சொத்து: இதில் சொத்து வாங்கியவருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டோ சொத்து உரிமை அளிக்கப்படும். பொதுவாக, பிளாட்கள் 99 ஆண்டு குத்தகைக்கு விற்கப்படுகின்றன. சில நகரங்களில் இந்த கால அளவு 10 முதல் 50 ஆண்டுகள் வரை கூட இருக்கின்றன. இந்த காலத்திற்குப் பிறகு, சொத்தின் உரிமை உரிமையாளருக்குத் திரும்புகிறது. மூதாதையர் சொத்து ஃப்ரீஹோல்ட் பிரிவில்தான் வருகின்றன.


லீஸ்ஹோல்ட் சொத்துக்கான விதிகள் என்ன?


லீஸ் அதாவது குத்தகைக்கு சொத்தை வாங்குவது என்பது குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு அந்தச் சொத்தின் உரிமையைப் பெறுவதாகும். நம் நாட்டில் பொதுவாக 99 வருட குத்தகைக்கு பிளாட்டுகள் விற்கப்படுகின்றன. சொத்தை வாங்குபவருக்கு சொத்தின் உரிமை 99 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும் என்பதும் இதற்கான உரிமை நிரந்தரமாக அவருக்கு கிடைக்காது என்பதும் இதன் பொருள். 99 ஆண்டுகள் முடிந்த பிறகு, சொத்தின் உரிமை அசல் உரிமையாளருக்குத் திரும்பும். குத்தகைக் காலம் முடிவதற்குள் கட்டிடம் இடிந்து விழுந்தால், எந்த அளவிலான நிலத்தில் பிளாட்கள் கட்டப்பட்டுள்ளதோ, அந்த நிலத்தில் உள்ள அனைத்து பிளாட்காரர்களுக்கு இடையில் தற்போதைய சர்க்கிள் ரேட் தொகை சம பங்குகளாக பிரிக்கப்படும்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வு


லீஸ்ஹோல்ட் சொத்தை ஃப்ரீஹ்ல்ட் சொத்தாக மாற்றுவதற்கான விதிகள் மற்றும் விதிமுறைகள்


ஒருவர் லீஸ்ஹொல்டில் சொத்து வாங்கி, அதை ஃப்ரீஹோல்டில் மாற்ற விரும்பினால், அதற்கான சில விதிகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். லீஸ்ஹொல்டை ஃப்ரீஹோல்டாக மாற்ற பொதுவாக இரண்டு முறைகள் உள்ளன.


- முதல் வழி: சில சமயங்களில் பில்டர்கள், அதாவது சொத்தை கட்டியவர்கள் அவ்வப்போது சொத்தை ஃப்ரீஹோல்டாக மாற்றுவதற்கான விருப்பத்தை வழங்குகிறார்கள். ஆனால், அந்த பில்டரிடம் அந்த சொத்திற்கான உரிமை இருந்தால்தான் அவர் அதை ஃப்ரீஹோல்டாக்க முடியும். அவருடைய சொத்து ஏற்கனவே குத்தகைக்கு விடப்பட்டிருந்தால், அவர் உங்களுக்கு ஃப்ரீஹோல்ட் உரிமையை வழங்க முடியாது.


- இரண்டாவது வழி: சில சமயங்காளில், நீங்கள் எந்த மாநிலத்தில் சொத்தை வாங்கியுள்ளீர்களோ, அந்த மாநில அரசு அந்த குத்தகைக் காலத்தில் சொத்தை ஃப்ரீஹோல்டாக மாற்றுவதற்கான விருப்பத்தை பிளாட் உரிமையாளர்களுக்கு வழங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விரும்பினால், உங்கள் சொத்தை ஃப்ரீஹோல்டாக மாற்றலாம்.


லீஸ்ஹோல்ட் சொத்தை விற்க முடியுமா?


ஒருவர் 99 வருட குத்தகைக்கு வீடு அல்லது பிளாட்டை எடுத்திருந்தால், அந்த வீடு 99 வருடங்களுக்கு அவருக்கு சொந்தமானது. ஆனால் 99 வருட குத்தகைக்கு ஒரு பிளாட் வாங்கி 10 வருடங்கள் உபயோகித்த பிறகு விற்க நினைத்தால் அது சாத்தியமா என்ற கேள்வி இப்போது பலரது மனதில் இருக்கும். லீஸுக்கு வீட்டை வாங்கும் ஒருவரால் அதை விற்க முடியாது என்றும், ஆனால், அந்த லீஸை வேறொருவர் பெயரில் மாற்ற முடியும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். மீதமுள்ள குத்தகைக் காலத்திற்கு மட்டுமே மாற்றுவதற்கு அவருக்கு உரிமை இருக்கும். அதற்கும் அவர் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். 


சொத்து உரிமையாளர்கள் ஃப்ரீஹோல்ட் சொத்துகளை மட்டுமெ விற்க முடியும். உங்களிடம் ஃப்ரீஹோல்டு சொத்து இருந்தால், அதை பில்டர் போன்ற ஒருவருக்கு குத்தகைக்கு கொடுக்க உங்களுக்கு உரிமை உண்டு. அந்த குத்தகை காலம் முடிந்த பிறகு, அந்த சொத்தை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | Diwali Bonus: போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? இதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ