Diwali Bonus: போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? இதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன?

Diwali Bonus Calculation: அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பண்டிகைக் காலங்களில், குறிப்பாக தீபாவளியின் போது போனஸ் அளிக்கும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. கொண்டாட்டத்தில் மேலும் மகிழ்ச்சியை சேர்க்கவும், பண்டிகை கால செலவுகளை ஈடுகட்டவும் இந்த போனஸ் வழங்கப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 18, 2024, 05:15 PM IST
  • தீபாவளி போனஸ் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றது?
  • இதற்கான சூத்திரம் என்ன?
  • போனஸ் கணக்கீடு தொடர்பான சில முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.
Diwali Bonus: போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? இதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன? title=

Diwali Bonus Calculation: பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. சில நாட்களுக்கு முன்னர் நவராத்திரி கொண்டாட்டங்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிக்கைகான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன. தீபாவளி என்றாலே, புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் ஆகியவற்றுடன் நம் அனைவருக்கும் கண்டிப்பாக ஞாபகம் வரும் மற்றொரு விஷயம் தீபாவளி போனஸ்!!

அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு (Private Sector Employees) பண்டிகைக் காலங்களில், குறிப்பாக தீபாவளியின் போது போனஸ் அளிக்கும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. கொண்டாட்டத்தில் மேலும் மகிழ்ச்சியை சேர்க்கவும், பண்டிகை கால செலவுகளை ஈடுகட்டவும் இந்த போனஸ் வழங்கப்படுகின்றது. 

தீபாவளி போனஸ் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றது?

போனஸ் என்பது ஒரு வகையான நிதி ஆதாயம். இதை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு, அவர்களின் பணி செயல்திறன் மற்றும் நிறுவனத்தின் லாப நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் வழங்குகிறது. போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? போனஸ் வழங்கப்படுவதற்குப் பின்னால் ஒரு நிலையான கணக்கீடு உள்ளது. இது சட்டம் மற்றும் அந்தந்த நிறுவனத்தின் கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்படுகின்றது.

போனஸ் கணக்கீடு தொடர்பான சில முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.

1. போனஸ் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றது (Basic Salary) 

போனஸ் பொதுவாக ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் (Dearness Allowance) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. போனஸ் கணக்கீட்டில் மற்ற கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய மொத்த சம்பளம், அதாவது க்ராஸ் சேலரி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. 

உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.20,000 மற்றும் அகவிலைப்படி ரூ.5,000 என வைத்துக்கொண்டால், போனஸ் தொகை இந்த இரண்டையும் சேர்த்து, அதாவது ரூ.25,000 என்ற தொகையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

2. போனஸின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பு (Maximum and Minimum Limit)

‘போனஸ் செலுத்துதல் சட்டம், 1965’ (Payment of Bonus Act, 1965), இந்தியாவில் போனஸ் விதிகளை நிர்வகிக்கும் சட்டமாக உள்ளது. இதன்படி, நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 8.33% மற்றும் அதிகபட்சம் 20% வரை போனஸ் வழங்கப்படலாம். அதாவது, ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 12 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், அவருக்கு அவரது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் குறைந்தபட்சமாக 8.33% மற்றும் அதிகபட்சமாக 20% வரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.

3. தகுதி மற்றும் பணிக்காலம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படுகிறது (Eligibility and Service Years)

நிறுவனத்தில் ஊழியர் பணிபுரிந்திருக்கும் கால அளவு மற்றும் அவரது தகுதி ஆகியவையும் போனஸ் கணக்கீட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக, குறைந்தபட்சம் 30 நாட்களுக்காவது நிறுவனத்தில் பணிபுரிந்துள்ள ஊழியர்கள்தான் போனஸ் வழங்கப்பட தகுதியுள்ளவர்களாக கருதப்படுவார்கள். ஒரு பணியாளரின் பணிக்காலம் ஒரு வருடத்திற்கும் குறைவாக இருந்தால், அவர் வேலை செய்த மொத்த நாட்களின் அடிப்படையில் அவரது போனஸ் கணக்கிடப்படும். உதாரணமாக, ஒரு ஊழியர் 6 மாதங்கள் வேலை செய்திருந்தால், அவருக்கு 6 மாதத்தின் அடிப்படையில் போனஸ் கிடைக்கும்.

4. பண்டிகை கால போனஸ் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான போனஸ் இடையிலான வேறுபாடு (Festival Bonus and Performance Bonus)

பெரும்பாலும் ஊழியர்கள் பண்டிகை போனஸ் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான போனஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கருதுகின்றனர். ஆனால், இவை இரண்டுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. பண்டிகை கால போனஸ் நிறுவனங்கள் மூலம், தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற விசேஷங்களின் போது வழங்கப்படுகிறது. ஆனால், செயல்திறன் அடிப்படையிலான போனஸ் பணியாளரின் தனிப்பட்ட பணி செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. செயல்திறன் போனஸ் என்பது பணியாளர்களின் தனிப்பட்ட சாதனைகள், அவர்கள் தங்கள் இலக்குகளை பூர்த்தி செய்துள்ள வெற்றி விகிதம் மற்றும் நிறுவனத்தின் இலக்குகளின் பூர்த்தியடைந்த விகிதம் ஆகியவற்றைப் பொறுத்தது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.... வெறும் ரூ.7 சேமித்து, மாதா மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்

5. நிறுவனத்தின் லாபம் (Company's Profit)

போனஸை நிர்ணயிப்பதில் நிறுவனத்தின் லாபமும் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. நல்ல வகையில் லாபம் காணும் நிறுவனத்தால்தான் பணியாளர்களுக்கும் அந்த லாபத்தை பிரித்து அளிக்க முடியும். ஒரு நிறுவனம் அந்த நிதியாண்டில் நல்ல லாபம் ஈட்டியிருந்தால், ஊழியர்களுக்கு அதிக போனஸ் கிடைக்கும். மறுபுறம், நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தால், போனஸ் விகிதம் குறைவாக இருக்கலாம் அல்லது நிறுவனம் போனஸ் கொடுக்காமலும் இருக்கலாம். 

Government Employees

எனினும், அரசு ஊழியர்களுக்கு, இந்த விதிகள் சற்று வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் அவர்களின் போனஸ் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகின்றது. இவை நிலையான கொள்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. 

Bonus Calculation: போனஸ் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது

- போனஸைக் கணக்கிட, சராசரி சம்பளம் 30.4 ஆல் வகுக்கப்படுகிறது.
- அதன் பின்னர் அது 30 நாட்களால் பெருக்கப்படுகிறது. 
- போனஸ் தொகை இந்த சூத்திரத்தின் படி தீர்மானிக்கப்படுகிறது. 

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.
ஒரு பணியாளரின் மாதச் சம்பளம் ரூ.7,000 எனில், அவரது போனஸ் தொகையின் தோராயமான கணக்கீடு இப்படி இருக்கும்.

போனஸ்=சராசரி சம்பளம் {(ரூ.7,000) / 30.4} × 30 = ரூ.6,908

இந்த கணக்கீட்டின் படி, அந்த ஊழியரின் மொத்த போனஸ் தொகை சுமார் ரூ.6,908 ஆக இருக்கும். இந்த கணக்கீடு ஒரு நிலையான சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது பணியாளரின் போனஸின் அளவை துல்லியமாகவும் தெளிவாகவும் தீர்மானிக்க உதவுகிறது.

மேலும் படிக்க | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News