ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் கணக்குகளுக்கு வட்டி பணத்தை அனுப்புகிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதப் பணத்தை மத்திய அமைப்பு கணக்கிற்கு அனுப்பியுள்ளது. கடந்த நிதியாண்டிற்கான 8.1 சதவீத வட்டி விகிதத்தில் இபிஎஃப்ஓ கணக்கிற்கு இந்தத் தொகை மாற்றப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நான்கு தசாப்தங்களில் மிகக் குறைந்த வட்டி விகிதமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PF பங்களிப்புக்கான வட்டிப் பணம் உங்கள் கணக்கில் மாற்றப்படவில்லை என்றால், உங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம். இபிஎஃப் இருப்பை சரிபார்ப்பதன் மூலம், உங்களின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இபிஎஃப் இருப்பை நீங்கள் ஆன்லைன் மூலமாகவோ, ஆஃப்லைன் மூலமாகவோ சரிபார்க்கலாம். 


மேலும் படிக்க | RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு 


உங்களுடைய யுஏஎன்-ஐ பயன்படுத்தி இபிஎஃப்ஓ வலைதளத்தில் பிஎஃப் இருப்பை எவ்வாறு சரிபார்ப்பது என்ற வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
* இபிஎஃப்ஓ இன் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்குச் சென்று ‘Our Services’ என்ற டேபுக்குள் செல்ல வேண்டும். 


* இப்போது டிராப்-டவுனில் தோன்றும் பட்டியலில் இருந்து For Employees என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.


* அடுத்து ‘Member Passbook’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


* அடுத்து வரும் புதிய பக்கத்தில், உங்களுடைய யுஏஎன் எண், பாஸ்வேர்டு கேட்கப்படும். அதனை உள்ளீடு செய்த பின் காட்டப்படும் கேப்ச்சா கேள்விக்கு பதில் அளித்தப் பின்னர் ‘Login’ பட்டனை அழுத்த வேண்டும்.


* ஒருமுறை நீங்கள் EPF முகப்புப் பக்கத்தில் உள்நுழைந்ததும், அதில் உங்களுடைய பெயர், UAN எண் மற்றும் PAN எண் ஆகியவைக் காண்பிக்கப்படும்.


* இப்போது நீங்கள் உங்களது ஒரு Member ID-யை தேர்ந்தெடுக்க வேண்டும். 


* இதன்பின்னர் கீழே வரும் பல்வேறு ஆப்ஷன்கள் மூலமாக உங்களுடைய பிஎஃப் இருப்பைச் சரிபார்க்க முடியும். இப்போது நீங்கள் உங்களுடைய பிஃப் கணக்கில் இருக்கும் இருப்பை பார்க்க முடியும்.


மொபைல் எண் மூலம் பிஎஃப் இருப்பு சரிபார்த்தல்
* எஸ்எம்எஸ் மூலமாக உங்களுடைய பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதில்,‘EPFOHO UAN ENG‘ என டைப் செய்து அனுப்ப வேண்டும்.


மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பு அறிக
* 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் உங்களது பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்துகொள்ள முடியும். 


EPFO-ன் m-Sewa செயலி
* உங்களுடைய மொபைலில் m-Sewa செயலியை தரவிறக்கம் செய்து, அதில் ‘Member’ என்பதற்குள் சென்று ‘Balance/Passbook’ என்பதை அழுத்தி உங்களின் EPF இருப்பைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.


Umang செயலி
* உங்களுடைய மொபைலில் Umang செயலியை பதிவிறக்கம் செய்த பின்னர் Employee Centric Services என்பதற்கு கீழ் இருக்கும் EPFO ஆப்ஷனுக்குச் சென்று உங்களுடையை EPF இருப்பை சரிபார்க்கலாம்.


மேலும் படிக்க | ஆதார் அட்டையை வைத்து பேங்க் பேலன்சை எவ்வாறு சரிபார்ப்பது? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ