ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர், ஊழியர்களின் டெபாசிட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் கீழ் உறுதிசெய்யப்பட்ட பலனைப் பெறத் தகுதியுடையவர் ஆவார், ஒருவர் இறந்துவிட்டாலும், அவருடைய பங்களிப்பு ஹோல்டிங் அக்கவுண்ட்டில் வருவது நின்றுவிடும். உறுதிசெய்யப்பட்ட பலனைப் பெற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இபிஎஃப்ஓ அறிவிப்புப்படி, ஒரு ஊழியர் பணியில் இருக்கும் போது இறந்துவிட்டால், சில அலுவலகங்கள் முந்தைய சில நாட்களில் பங்களிப்பு பெறப்படவில்லை என்ற அடிப்படையில் கோரிக்கைகளை நிராகரிக்கின்றன. ஆனால் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இது போன்ற சந்தர்ப்பங்களில் உரிய சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும், அந்த சரிபார்ப்பனது ஏழு நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்காக குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளது.
மேலும் படிக்க | SBI Alert: கவனமாக இல்லையென்றால் முழு பணமும் காலி!! SBI விடுத்த எச்சரிக்கை
ஊழியர்களின் டெபாசிட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (இடிஎல்ஐ) என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டத்தின் அனைத்து சந்தாதாரர்களுக்கும் வழங்கப்படும் கட்டாயக் காப்பீட்டுத் திட்டமாகும். இதன்படி பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது நாமினி மொத்தத் தொகையைப் பெறுவார், அந்த தொகையானது இறந்தவரின் வேலையின் கடைசி 12 மாதங்களில் பெறப்பட்ட சம்பளத்தைப் பொறுத்தது, இதில் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகளை பரிந்துரைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. உறுப்பினர்களின் யூஏஎன் எண் மற்றும் ஆதார் விவரங்களை இபிஎஃப் கணக்கில் சேர்க்க வேண்டும், இதனை ஆன்லைனில் செய்ய பின்வரும் படிநிலைகளை பின்பற்றலாம்.
1) இபிஎஃப்ஓ-வின் அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று 'சேவைகள்' என்பதற்குச் செல்லவும்
2) இப்போது, ஊழியர்கள் பகுதிக்கு சென்று 'உறுப்பினர் யூஏஎன்/ஆன்லைன் சேவை' என்பதைக் கிளிக் செய்யவும்.
3) யுனிவர்சல் கணக்கு எண் (யூஏஎன்) மற்றும் பாஸ்வேர்டை போட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
4) இப்போது 'மேனேஜ் டேப்' என்பதன் கீழ், இ-நாமினேஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
5) குடும்ப அறிவிப்பைப் புதுப்பிக்க, 'ஆம்' என்பதைக் கிளிக் செய்யவும்.
6) 'குடும்ப விவரங்களைச் சேர்' என்பதைக் கிளிக் செய்யவும், இதில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளைச் சேர்த்து கொள்ளலாம்.
7) அடுத்து 'நாமினேஷன் விவரங்கள்' என்பதைக் கிளிக் செய்யவும், இதில் 'இபிஎஃப் நாமினேஷனை சேமி' என்பதைக் கிளிக் செய்யவும்.
8) 'இ-சைன் ' என்பதைக் கிளிக் செய்ததும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும். இதன் மூலம் இ-நாமினேஷன் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | Mutual Fund:மியூசுவல் ஃபண்டுகளை எப்போது ரிடீம் செய்ய வேண்டும்? எப்படி செய்வது