Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதி ஒரு நல்ல சேமிப்பு திட்டமாக உள்ளது. ஆனால், அதில் முதலீடு செய்ய, அதன் அனைத்து விதிகளையும் நீங்கள் அறிந்திருப்பது முக்கியம். உதாரணமாக, இதில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது? எவ்வளவு தொகை கொண்டு முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்? முதலீட்டின் மீதான கூட்டு வட்டியின் (Compound Interest) பலனை எவ்வாறு பெறுவது? இந்த கணக்கை திறக்க அவசியமான படிவம் எது? கடன் வாங்குவதற்கான நிபந்தனைகள் என்ன? இப்படி பல கேள்விகளுக்கான விடை உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சிறு சேமிப்பு திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. அதாவது இதில் அரசாங்கத்தின் உத்தரவாதம் உள்ளது. ஆகையால், இதில் முதலீடு செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை. ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. பல முறை அரசும் இது தொடர்பான விதிகளை மாற்றுகிறது. PPF-ன் புதிய விதிகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


PPF கணக்கைத் திறப்பதற்கான படிவம்-1


PPF கணக்கைத் திறக்க, படிவம் A-க்குப்  (Form-A) பதிலாக படிவம்-1ஐச் (Form-1) சமர்ப்பிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎஃப் கணக்கை நீட்டிக்க (டெபாசிட்டுடன்), முதிர்ச்சிக்கு ஒரு வருடத்திற்கு முன்பு படிவம் H-க்குப் பதிலாக படிவம்-4 இல் விண்ணப்பிக்க வேண்டும்.


PPF-இல் எவ்வளவு கடன் கிடைக்கும்?


நீங்கள் PPF கணக்கில் கடன் வாங்க விரும்பினால், விண்ணப்பித்த தேதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணக்கில் உள்ள 25% நிலுவை தொகையில் மட்டுமே கடன் வாங்க முடியும். உதாரணமாக, 31 மார்ச் 2022 அன்று நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்தால், இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் (31 மார்ச் 2020) உங்கள் PPF கணக்கில் ரூ.1 லட்சம் இருந்தால், அதில் 25% அதாவது ரூ.25 ஆயிரம் கடனாகப் பெறலாம்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள்ளுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படியுடன் இதுவும் உயரக்கூடும்!!


PPF: கடனுக்கான வட்டி விகிதம் என்னவாக இருக்கும்?


பிபிஎஃப் கணக்கில் (PPF Account) உள்ள நிலுவைத் தொகையில் நீங்கள் கடன் வாங்கினால், வட்டி விகிதம் (Interest Rate) 2% லிருந்து 1% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடனின் அசல் தொகையை செலுத்திய பிறகு, இரண்டு தவணைகளுக்கு மேல் வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி முதல் வட்டி கணக்கிடப்படுகிறது.


15 ஆண்டுகளுக்குப் பிறகு PPF கணக்கில் என்ன நடக்கும்?


15 வருடங்கள் முதலீடு செய்த பிறகும் முதலீடு செய்வதில் ஆர்வம் இல்லை என்றால், இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகும் உங்கள் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்யாமலேயே அப்படியே தொடரலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. முதிர்வுக்குப் பிறகு PPF கணக்கை தொடரும் விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால், நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.


PPF: ஒரு மாதத்தில் எத்தனை முறை டெபாசிட் செய்யலாம்?


பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் முதலீடு ரூ.50 இன் மடங்குகளில் இருக்க வேண்டும். இந்தத் தொகை ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 500 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஒரு வருடம் முழுவதும் 1.5 லட்சம் வரை PPF கணக்கில் டெபாசிட் செய்யலாம். இதற்கு வரி விலக்கு பலன் உண்டு. நீங்கள் ஒரு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே PPF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.


மேலும் படிக்க | Loan Transfer: வட்டி அதிகமாக இருந்தால், கடனை வேறு இடத்திற்கு மாற்றுவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ