Loan Transfer: வட்டி அதிகமாக இருந்தால், கடனை வேறு இடத்திற்கு மாற்றுவது எப்படி?

Personal Loan Transfer : அதிக வட்டியை சமாளிக்க வழி தெரியாமல் தவிப்பவரா நீங்கள்? அதிலும் தனிநபர் கடனால் அவதிப்படுபவரா? இந்தக் கட்டுரை உங்களுக்கானது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 25, 2024, 02:16 PM IST
  • அதிக வட்டியை சமாளிக்க வழி
  • தனிநபர் கடன் வாங்குவது நல்லதா?
  • தனிநபர் கடனை எப்படி வேறு வங்கிக்கு மாற்றுவது?
Loan Transfer: வட்டி அதிகமாக இருந்தால், கடனை வேறு இடத்திற்கு மாற்றுவது எப்படி? title=

தனிநபர் கடனுக்கு வங்கி அதிக வட்டி வசூலித்தால், வேறு வங்கிகள் அல்லது நிதி நிறுவனத்தில் குறைவான வட்டிக்கு கடன் கிடைக்கும்போது கடனை வேறு இடத்திற்கு மாற்றுவது நல்ல யோசனையாக இருக்கும். அவசரத் தேவை முதல் பல காரணங்களுக்காக கடன் வாங்கும் நமக்கு சில சமயம், வேறு நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்தால் மனம் அலைபாயும். அதிக வட்டியாக கடனை அடைக்கலாம் என்று பார்த்தால், பணம் கையில் இல்லை என்ற சமயத்தில் என்ன செய்வது?

அவசர தேவைகளுக்காகவே தனிநபர் கடனை வாங்குகிறோம். ஆனால் தனிநபர் கடன் வாங்கும்போது, அதன் வட்டி விகிதம் மிக அதிகமாக இருப்பதால் கவலை அதிகமாகிறது. சில நேரங்களில் அதிக வட்டி காரணமாக தனிநபர் கடனை திருப்பிச் செலுத்துவது கடினம். ஆனால், தனிநபர் கடன் என்பது பிணையில்லாத கடன், எனவே அதைப் பெறுவது எளிது என்பதாலேயே பலரும் தனிநபர் கடனைப் பெறுகின்றனர்.

கடினமான காலங்களில், பணத்திற்கான எந்த ஏற்பாடும் உங்களிடம் இல்லாதபோது, ​​நீங்கள் தனிநபர் கடனைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் தனிநபர் கடனில் அதன் வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்கும் நிலையில், அவசரத்துக்கு வாங்கிய கடனை, இருப்புப் பரிமாற்ற விருப்பத்தைத் (Personal Loan balance transfer) தேர்வு செய்து மாற்றினால், வட்டி சுமை குறையும்.  

இருப்பு பரிமாற்றம் என்றால் என்ன?

இருப்பு பரிமாற்றம் என்பது ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு கடனை மாற்றும் ஒரு முறையாகும். கடன் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்போது, அதில் இருந்து நிவாரணம் பெற பெரும்பாலானோர் இந்த முடிவை எடுக்கின்றனர். உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால், மற்ற வங்கிகள் உங்களுக்கு தற்போதைய வட்டி விகிதத்தை விட குறைந்த விகிதத்தில் கடனை வழங்கும். குறைந்த வட்டி விகிதத்தால், உங்கள் EMI யும் குறைகிறது.

மேலும் படிக்க | ஷாக்கடிக்கும் கரண்ட் திருட்டு! வருஷத்துக்கு ரூ.600 பில்லியன் மின்சாரம் இழப்பு!

இருப்பு பரிமாற்றத்தின் நன்மைகள்

தற்போதைய வட்டி விகிதங்களை விட சிறந்த வட்டி விகிதத்தைப் பெறுவதே இருப்பு பரிமாற்றத்தின் மிகப் பெரிய நன்மையாகும், இதனால் EMI குறையும்.இருப்பு பரிமாற்ற வசதியைப் பயன்படுத்துவதன் மூலம், கடன் மறுசீரமைப்புக்கான வாய்ப்பு கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், கடன் வாங்குபவர்கள் தங்களின் தற்போதைய தனிநபர் கடனின் மீதமுள்ள காலத்தை விட நீண்ட காலத்தை தேர்வு செய்யலாம். தவணைக்காலம் அதிகமாக இருப்பதால் இஎம்ஐயும் குறையும்.

டாப் அப் கடன்

பல வங்கிகள் ஏற்கனவே இருக்கும் தனிநபர் கடனை மாற்றுபவர்களுக்கு டாப்-அப் தனிநபர் கடன் வசதியையும் வழங்குகின்றன. டாப்-அப் தனிநபர் கடன் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் கடனை விட அதிகமாக கடன் வாங்க உதவுகிறது.

இருப்பு பரிமாற்ற கட்டணம்
தனிநபர் கடன் இருப்பு மாற்றத்திற்காக புதிய வங்கியில் எந்த பிணையத் தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் இதற்காக ஏற்கனவே உள்ள வங்கிக்கு முன்கூட்டியே பணம் மற்றும் கடன் பரிமாற்ற கட்டணத்தை செலுத்த வேண்டும். இது தவிர, நீங்கள் கடனை மாற்றும் புதிய வங்கியில், கடன் செயலாக்கக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களுடன் முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், இது பொதுவாக புதிய தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது விதிக்கப்படும் கட்டணங்கள் ஆகும்.

மேலும் படிக்க | சிறுகக் கட்டி பெருக வாழ வகை செய்யும் ஓய்வூதிய திட்டங்கள்! டாப் 10 லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News