7th Pay Commission: அகவிலைப்படி மட்டுமல்லாமல் ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுக்கும் என கூறப்படுகின்றது. இது நடந்தால், அது ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பூஸ்டர் டோஸ் போல செயல்படும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருந்தால், மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) 54 சதவீதமாக உயரும். இதன் மூலம் மாத சம்பளமும் அமோகமாக உயரும். தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 50 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.
நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய அரசு பணிகளில் பணிபுரிகிறார்களா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது.
மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) சம்பளம் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட உள்ளது. இதனால் பல லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். புதிதாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள மோடி அரசாங்கம், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை விரைவில் உயர்த்தப் போகிறது. அதன் பிறகு சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும்.
அகவிலைப்படி மட்டுமல்லாமல் ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுக்கும் என கூறப்படுகின்றது. இது நடந்தால், அது ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பூஸ்டர் டோஸ் போல செயல்படும். இதனால் அவர்களது ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
இந்த இரண்டு முடிவுகளும் எடுக்கப்பட்டால், இந்த ஆண்டு மத்திய ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இந்த முறை டிஏ உயர்வு (DA Hike) குறித்து, அதாவது அரசாங்கம் அகவிலைப்படியை எவ்வளவு உயர்த்தும் என்பது குறித்து இன்னும் எந்த தெளிவும் இல்லை. எனினும், குறைந்தபட்சம் 4% உயர்வு இருக்கும் என கூறப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருந்தால், மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) 54 சதவீதமாக உயரும். இதன் மூலம் மாத சம்பளமும் அமோகமாக உயரும். தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 50 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அகவிலைபப்டி 4% உயர்த்தப்பட்டால், சம்பளம் எவ்வளவு உயரும் என்ற கணக்கையும் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரமாக இருந்தால், 4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு, மாதந்தோறும் ரூ.2000 உயர்த்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் ரூ.24 ஆயிரம் சம்பள உயர்வு இருக்கும். விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.
அகவிலைப்படி அதிகரிப்புக்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், அரசாங்கம் ஜூலை முதல் வாரத்தில் இந்த முடிவை எடுக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது ஃபிட்மென்ட் ஃபேக்டர் விகிதத்தை உயர்த்த அரசு யோசித்து வருவதாக பேச்சு அடிபடுகிறது. இப்படி நடந்தால் சம்பளம் பல ஆயிரம் ரூபாய் உயரும். ஃபிட்மென்ட் ஃபேக்டரை அரசு நேரடியாக 2.60 மடங்குகளில் இருந்து 3.0 மடங்கு அல்லது 3.68% ஆக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பெரிய பரிசாக இருக்கும். ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.