மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா? நாடாளுமன்றத்தில் விளக்கிய ரயில்வே அமைச்சர்
Railway Ticket Concession For Senior Citizens: இரயில்வேயின் குறைந்த கட்டணத்திற்கு அரசு பயணிகள் கட்டணத்தில் வழங்கும் மானியம் தான் பெரிய காரணம். ஆனால் ரயில் கட்டணத்தில் பயணிகளுக்கு ரயில்வே துறை எவ்வளவு மானியம் வழங்குகிறது என்று பலருக்குத் தெரியாது.
Railway Ticket Concession For Senior Citizens: இந்தியாவில் ரயில் வண்டிகள் போக்குவரத்தின் உயிர் நாடியாக பார்க்கப்படுகின்றன. ஏழை, பணக்காரர்கள் என அனைவரும் வசதியாக பயணிக்க ஏற்ற வகையாய் ரயில் பயணங்கள் உள்ளன. பேருந்து கட்டணங்களை ஒப்பிடும் போது ரயில் கட்டணங்கள் மிக குறைவாக உள்ளன. நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.
Government Subsidy: அரசாங்கம் அளிக்கும் மானியம்
இரயில்வேயின் குறைந்த கட்டணத்திற்கு அரசு பயணிகள் கட்டணத்தில் வழங்கும் மானியம் தான் பெரிய காரணம். ஆனால் ரயில் கட்டணத்தில் பயணிகளுக்கு ரயில்வே துறை எவ்வளவு மானியம் வழங்குகிறது என்று பலருக்குத் தெரியாது.
நாடாளுமன்றத்தில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ரயில் டிக்கெட் மானியம் குறித்த கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பதிலளித்தார். நாட்டில் ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பயண டிக்கெட்டில் 46 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், பயணிகளுக்கான மானியத்திற்காக ரயில்வே அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.56,993 கோடியை செலவிடுகிறது என்று தெரிவித்தார்.
முன்னதாக, மூத்த குடிமக்களுக்கு தனி மானிய வசதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், மார்ச் 2020, கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் தள்ளுபடி (Train Ticket Concession) நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Raiilway Ticket Fare: 100 ரூபாய்க்கு 46 ரூபாய் நிவாரணம்
மூத்த குடிமக்கள் (Senior Citizens) மற்றும் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு முன்னர் மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டு விட்டது. இந்த மானியத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, அமைச்சர், “இந்திய அரசாங்கத்தால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த மானியம் ரூ.56,993 கோடி. ஒவ்வொரு 100 ரூபாய் பயணச் சேவைக்கும், 54 ரூபாய் செலவாகும். அனைத்து வகை பயணிகளுக்கும் 46 சதவீதம் மானியம் ஏற்கனவே வழங்கப்படுகிறது." என்று கூறினார்.
துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் சாலைகள் மூலம் இணைக்கப்பட்டதைப் போலவே, நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர ரயில் நிலையங்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
விரைவு ரயில் சேவை குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், புஜ் மற்றும் அகமதாபாத் இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவையை ரயில்வே ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், அதன் சிறந்த சேவையால் பயணிகளின் திருப்தி நிலை மிக அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.
நமோ பாரத் விரைவு ரயில், புஜ் மற்றும் அகமதாபாத் இடையேயான 359 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்து, நகரங்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ