EPFO Update: பிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. சமீபத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு யூனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆதாருடன் இணைக்கும் தேவையை தளர்த்துவதற்கான முக்கியமான முடிவை எடுத்துள்ளது. பல்வேறு காரணங்களால் ஆதார் பெற முடியாத ஊழியர்களுக்கு இந்த முடிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு சுலபமாகும் EPF க்ளெய்ம் செயல்முறை
இந்த முடிவின் மூலம், UAN -ஐ ஆதாருடன் இணைக்க முடியாத ஊழியர்களுக்கு EPF க்ளெய்ம் செயல்முறை எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் ஆக்கப்படுகின்றது. இது அவர்கள் வருங்கால வைப்பு நிதியின் பலன்களைப் பெறுவதை எளிதாக்கும்.
EPF Subscribers: யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?
இந்த விலக்கின் பலன் பின்வரும் வகைகளில் வரும் ஊழியர்களுக்குக் கிடைக்கும்:
- சர்வதேச ஊழியர்கள்: இந்தியாவில் பணிபுரிந்துவிட்டு தங்கள் நாட்டுக்கு திரும்பிய மற்றும் ஆதார் பெற முடியாத ஊழியர்கள்.
- வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள்: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய குடிமக்கள்.
- நிரந்தரமாக வெளிநாடு சென்ற இந்திய குடிமக்கள்: தற்போது வெளிநாட்டில் நிரந்தரமாக வசிக்கும் இந்திய குடிமக்கள்.
- நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்கள்: இந்திய ஆதார் திட்டம் பொருந்தாத நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்கள்.
- இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் மற்றும் ஆதார் வைத்திருக்காத EPF&MP சட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்கள்.
இந்த ஊழியர்களுக்கு, மாற்று ஆவணங்கள் மூலம் பிஎஃப் க்ளெய்ம்களை செட்டில் செய்யும் செயல்முறையை EPFO தொடங்கியுள்ளது.
க்ளெய்ம்களை உருவாக்கும் செயல்முறை
இப்போது, ஆதார் இல்லாமல் EPF பெற சில மாற்று ஆவணங்கள் தேவைப்படும். இந்த ஆவணங்களில் பின்வருவன அடங்கும்:
- சரிபார்ப்பு ஆவணம்: பாஸ்போர்ட், குடியுரிமைச் சான்றிதழ் அல்லது பிற அரசு அடையாள அட்டை.
- கூடுதல் ஆய்வு: பான் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பிற தகுதி அளவுகோல்களின் அடிப்படையில் பணியாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
- முதலாளி / நிறுவன சரிபார்ப்பு: க்ளெய்ம் தொகை ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், பணியாளரின் நம்பகத்தன்மை முதலாளி / நிறுவனத்திடமிருந்து சரிபார்க்கப்படும்.
- க்ளைம் செட்டில்மென்ட் முறை: பரிவர்த்தனையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அனைத்து EPF கோரிக்கைகளும் இப்போது NEFT (நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர்) மூலம் செட்டில் செய்யப்படும்.
மேலும் படிக்க | EPFO RULE: ஓய்வூதிய பலன் பாதிக்காமல்... PF கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி
EPFO New Rules: இபிஎஃப்ஓ புதிய விதிகள்
இந்த செயல்முறையை மிகவும் கவனமாக கையாளும் பொறுப்பு EPFO அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழக்கின் விசாரணைக்கும், இ-அலுவலக கோப்பு ஒப்புதல், அதற்கான பொறுப்பு அதிகாரி, அதாவது ஆஃபிசர்-இன்-சார்ஜ் (OIC) மூலம் அங்கீகரிக்கப்படும். ஊழியர்கள் தங்கள் பணிக்காலம் முழுவதும் ஒரே UAN ஐப் பயன்படுத்தவும், பழைய சேவைப் பதிவுகளை அவர்களின் தற்போதைய UAN க்கு மாற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எதிர்காலத்தில் EPF இன் பலன்களை எளிதாகப் பெற இது உதவும்.
இந்த மாற்றத்தின் பலன் என்ன?
- இந்த நடவடிக்கை, ஆதார் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது.
- இதன் மூலம் அவர்கள் மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தி தங்களது இபிஎஃப் க்ளெய்ம்களை (EPF Claim) எளிதாக செட்டில் செய்து கொள்ளலாம்.
- இந்த ஏற்பாட்டின் மூலம், செயல்முறை எளிமையான முறையில் மாற்றப்ப்பட்டுள்ளது.
- ஆவணங்கள் மூலம் அதிக நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதால், இது முற்றிலும் பாதுகாப்பானது.
இந்த பிரிவில் வரும் ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த பிரிவில் வரும் பணியாளர்கள் பாஸ்போர்ட், குடியுரிமை சான்றிதழ் மற்றும் பிற விருப்ப ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். கூடுதலாக, EPFO இன் ஒரு உறுப்பினர் ஒரு இபிஎஃப் கணக்கு (One Member One EPF Account) அம்சத்தைப் பயன்படுத்தி, அவர்கள் அனைத்து பழைய UAN களையும் ஒரே UAN ஆக இணைக்க முடியும். இதன் மூலம் அவர்களின் வருங்கால வைப்பு நிதியை, அதாவது இபிஎஃப் கணக்கை (EPF Account) பாதுகாப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் செய்யப்போகும் க்ளெய்ம் செயல்முறைகளையும் எளிதாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ