இந்திய ரயில்வே வெளியிட்ட புதிய அப்டேட்: பண்டிகைக் காலத்தில், இந்தியன் ரயில்வே பெரும் அதிர்ச்சியான செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி டிக்கெட் விலையை இந்தியன் ரயில்வே துறை உயர்த்தியுள்ளது. எனவே இந்த பண்டிகை காலத்தில் நீங்களும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், எந்த டிக்கெட் விலை அதிகரித்துள்ளது என்பதை இங்கே சரிப்பாத்து தெரித்துக்கொள்ளவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு
இந்தியன் ரயில்வே துறைக்கு கிடைத்த தகவலின்படி, பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இதன் விலை 10 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 30 ரூபாய்க்கு டிக்கெட் இந்த பிளாட்பார்ம் டிக்கெட் விற்கப்படுகிறது. அதன்படி தற்போது பிளாட்பார்ம் டிக்கெட் விலையை இந்தியன் ரயில்வே 20 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஐபோன் நிறுவனத்துக்கு இவ்வளவு அபராதமா?... அதிரடி காட்டிய பிரேசில்


30 ரூபாய் பிளாட்பார்ம் டிக்கெட் கிடைக்கும்
உங்கள் குடும்பத்தில் யாரேனும் இந்த முறை ரயிலில் ஏற்றி விட வந்தால், அவர்கள் பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இதற்கிடையில் `தீபாவளி பண்டிகையின் போது பிளாட்பார்மில் அதிக கூட்டத்தை குறைக்கும் வகையில் பிளாட்பார் டிக்கெட்டின் விலை 10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. 



மேலும் படிக்க | இனி UPI டிரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்?


அக்டோபர் 30 வரை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது
இந்தியன் ரயில்வே இந்த விலையை அக்டோபர் 30 வரை உயர்த்தியுள்ளது, அதாவது, 30 ஆம் தேதிக்குப் பிறகு, பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் விலை மீண்டும் 10 ரூபாய்க்கு கிடைக்கும். டெல்லி, ஆனந்த் விஹார் ரயில் முனையம் மற்றும் காசியாபாத், சாஹிபாபாத் சந்திப்பு போன்ற நிலையங்களில் அதிகபட்ச மக்கள் காணப்படுவார்கள், ஏனெனில் இங்கிருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் தீபாவளி பண்டிகைக்கு உ.பி, பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணிக்கின்றனர்.


இந்த நிலையில் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தியன் ரயில்வே துறை இந்த மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது. இதனுடன், ஆர்பிஎஃப் மூலம் சிறப்பு பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தீபாவளிக்கு இந்தியன் ரயில்வேயால் பல சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன, இதனால் பயணிகள் எளிதாக டிக்கெட் பெற முடியும். 


மேலும் படிக்க | இந்த வங்கிகளில் அக்கவுண்ட் இருக்கா? வாட்சப்பிலேயே பணம் அனுப்பலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ