இந்த வங்கிகளில் அக்கவுண்ட் இருக்கா? வாட்சப்பிலேயே பணம் அனுப்பலாம்!

எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா வங்கி போன்ற முக்கிய வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வங்கி வசதியை வழங்கி வருகின்றது.   

Written by - RK Spark | Last Updated : Oct 16, 2022, 12:16 PM IST
  • பல்வேறு வங்கிகள் வாட்சப் பேங்கிங் சேவையை வழங்கி வருகிறது.
  • இதன் மூலம் பண பரிவர்தனைகளையும் செய்து கொள்ளலாம்.
  • அரசு மற்றும் தனியார் வங்கிகளும் இந்த சேவையை வழங்குகிறது.
இந்த வங்கிகளில் அக்கவுண்ட் இருக்கா? வாட்சப்பிலேயே பணம் அனுப்பலாம்!  title=

பல்வேறு துறைகளிலும் தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி கண்டுவிட்டது, குறிப்பாக வங்கியில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நமது வேலை இப்பொழுது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது.  பாரத ஸ்டேட் வங்கி , ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற அனைத்து முக்கிய வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வங்கி வசதியை வழங்கி வருகின்றது.  இப்போது ஓவ்வொரு வங்கியும் வழங்கக்கூடிய வாட்ஸ் அப் பேங்கிங் சேவைகளை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி இங்கே காண்போம்.

பிஎன்பி வங்கியின் வாட்ஸ்அப் வங்கி வசதி:

அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) கடந்த 3ம் தேதி வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வங்கிச் சேவைகளை வழங்குவதாக தெரிவித்தது.  இதனை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்கள் பிஎன்பி வங்கியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 919264092640-ஐ சேமித்து, இந்த எண்ணுக்கு ஹாய்/ஹலோ என்று வாட்ஸ் அப்பிலிருந்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க | Amazon, Flipkart, Myntra: தீபாவளிக்கு சிறந்த ஆபர் வழங்கும் தளம் இதுதான்!

எஸ்பிஐ வங்கியின் வாட்ஸ்அப் வங்கி வசதி :

மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ சமீபத்தில் வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகம் செய்தது.  இதனை ஆக்டிவேட் செய்ய வங்கியில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 917208933148 என்ற எண்ணிற்கு WAREG A/C எண்ணை டைப் செய்து வாட்ஸ் அப்பிலிருந்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.

ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாட்ஸ்அப் வங்கி வசதி:

ஹெச்டிஎஃப்சி வங்கியில் வாட்ஸ்அப் சேவையில் அனைத்து வாடிக்கையாளர்களும் 90+ சேவைகள் மற்றும் 24x7 தடையில்லா டிரான்ஸாக்ஷன்களை செய்துகொள்ள முடியும், இது என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட பாதுகாப்பான சேவையாகும்.  இருப்பினும்  வங்கியில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 70700 22222 என்ற எண்ணுக்கு "ஹாய்" என்று வாட்ஸ் அப்பிலிருந்து மெசேஜ்அனுப்ப வேண்டும்.

ஐசிஐசிஐ வங்கியின் வாட்ஸ்அப் வங்கி வசதி:

ஐசிஐசிஐ வங்கியின் வாட்ஸ்அப் பேங்கிங் வசதியைப் பெற உங்கள் மொபைலில் 8640086400 என்ற எண்ணைச் சேமித்து வங்கியில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து அந்த எண்ணிற்கு 'ஹாய்' என்று வாட்ஸ் அப்பிலிருந்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.  மேலும் மிஸ்ட்டு கால் அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவும் சேவையை அணுகலாம் OPTIN என்று டைப் செய்து 9542000030 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். 

ஆக்சிஸ் வங்கியின் வாட்ஸ்அப் வங்கி வசதி:

ஆக்சிஸ் வங்கியின் வாட்ஸ்அப் பேங்கிங் வசதியைப் பெற உங்கள் மொபைலில் 7036165000 என்ற எண்ணை சேமித்து "ஹாய்"  என்று வாட்ஸ் அப்பிலிருந்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.  இதன் மூலம் ​​கணக்குகள்/காசோலைகள், கிரெடிட் கார்டுகள், டெர்ம் டெபாசிட்கள் மற்றும் கடன்கள் போன்ற பல சேவைகளை பெறலாம்.

பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் வாட்ஸ்அப் வங்கி வசதி:

வாட்ஸ் அப் பேங்கிங் குறித்து பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதன் இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.  இதன் வாட்ஸ்அப் பேங்கிங் சேவையானது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளுர் இந்திய மொபைல் எண்களிலும், சர்வதேச மொபைல் எண்களிலும் அணுக முடியும்.

மேலும் படிக்க | அதிக லாபம் வேண்டுமா? போஸ்ட் ஆபிசின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News