Ratan Tata: இந்திய தேசத்தின் நிஜ ரத்தினமாக, இந்தியாவின் அடையாளமாக, பல தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 வயதில் மும்பை மருத்துவமனையில் காலமானார். ரத்தன் டாடா காலமான செய்தி நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு முக்கிய தலைவர்கள், சாமானிய மக்கள், தொழிலதைபர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகப்பெரிய பணக்காரராக இருந்த ரத்தன் டாடா மிக எளிய மனிதராக இருந்ததுதான் அவரை பிற தொழிலதிபர்களிடமிருந்து தனியாக காட்டியது என்று கூறினால் அது மிகையாகாது. அமைதியான அந்த உருவத்தில் அறிவாற்றல், சிந்தனை, புதுமை, ஈகை, நவீனம், பாரம்பரியம், சாதுர்யம் என பல விசேஷ குணங்கள் ஒளிந்திருந்தன. தான், தன் குடும்பம், தன் மக்கள் என இல்லாமல் தனது பல நிறுவனங்களில் பணிபுரிந்த கடைநிலை ஊழியர் வரை அனைவரும் சந்தோஷமான, குறையற்ற வாழ்வை வாழ வேண்டும் என அவர் ஆசைப்பட்டார், அதற்காக தன்னாலான அனைத்தையும் செய்தார். இதற்கு அவரது நிறுவன ஊழியர்கள் கூறும் பல உண்மை சம்பவங்களே சாட்சி.


இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் இவரிடம் பாடம் கற்று வாழ்வில் உயர்ந்த வணிகர்களும், தொழிலதிபர்களும் ஏராளம். ரத்தன் டாடாவின் மரணம் குறித்த செய்திகள் வெளிவந்தவுடன், கூகுள் CEO சுந்தர் பிச்சை, தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு இதயப்பூர்வமான பதிவைப் பகிர்ந்து கொண்டார். முன்னாள் டாடா குழுமத் தலைவருடனான தனது கடைசி சந்திப்பைப் பற்றி அவர் இதில் கூறியிருந்தார்.


"இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டில் அவர் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார்" என்பதை சுந்தர் பிச்சை தனது பதிவில் எடுத்துரைத்தார். மேலும் அவர் வணிகம் மற்றும் பரோபகாரம் ஆகிய இரண்டிலும் ஒரு அசாதாரண பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.



மேலும் படிக்க | ரத்தன் டாடா வாழ்க்கையை பற்றிய 15 முக்கிய தகவல்கள், எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்


இந்தியாவில் நவீன வணிகத் தலைமை மற்றும் முறைகளுக்கு சிறந்த வழிகாட்டி மேம்படுத்துவதில் டாடா முக்கியப் பங்காற்றியதாகவும் சுந்தர் பிச்சை பாராட்டினார்.


முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் உடல் நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். 86 வயதான அவர் வயது மூப்பினால் வரும் உடல்நல பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


"டாடா குழுமத்தை மட்டுமின்றி நமது தேசத்தின் கட்டமைப்பையும் வடிவமைத்ததில் அவரது பங்களிப்பு அளவிட முடியாத அளவில் உள்ளது. அசாதாரணமான தலைவரான திரு.ரத்தன் டாடா நம்மிடமிருந்து விடைபெறுகிறார்” என்று டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 


மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ரத்தன் டாடாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவருடைய உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அவரது உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் (NCPA) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


மேலும் படிக்க | Ratan Tata No More | மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ