Ratan Tata No More | மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்

Ratan Tata Passed Away News:  86 வயதான டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 10, 2024, 12:33 AM IST
Ratan Tata No More | மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார் title=

Ratan Tata Latestt News Update:  டாடா சன்ஸ் நிறுவனத்தின் மதிப்பிற்குரிய முன்னாள் தலைவரான ரத்தன் டாடா காலமானார். இது இந்தியா மற்றும் உலகளாவிய வணிக சமூகம் ஆகிய இரண்டிற்கும் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளது. புகழ்பெற்ற தொழிலதிபர் அக்டோபர் 9 (புதன்கிழமை) இரவு காலமானார். அவரின் மறைவு நாட்டில் பரவலான துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

வயோதிக நோய் காரணமாக கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்து விட்டார் எனத்தகவல் வெளியானதை அடுத்து, அதற்கு விளக்கம் அளித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து அக்டோபர் 9 நள்ளிரவு அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார், அங்கு ரத்தன் டாடா அவர்கள் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

2 முன்புதான் "கவலைப்பட ஒன்றுமில்லை" எனப்பதிவு போட்ட ரத்தன் டாடா

அக்டோபர் 7 ஆம் தேதி தனது சமூக ஊடகப்பதிவில், "எனது உடல்நலம் குறித்து பரவும் வதந்திகளை நம்பாதீர்கள். அவை ஆதாரமற்றவை. அது வெறும் வதந்தி. கவலைப்பட ஒன்றுமில்லை. அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.

மேலும் எனது வயது தொடர்பான மருத்துவ சிகிச்சைக்காக பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறேன். நான் நல்ல மனநிலையுடன் இருக்கிறேன். பொதுமக்களும் ஊடகங்களும் வதந்திகளை பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறிய அவர், "என்னை குறித்து நினைத்ததற்கு நன்றி" எனவும் பதிவிட்டிருந்தார்.

1991 இல் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றார்

ரத்தன் டாடாவுக்கு ரத்த அழுத்தம் திடீரென குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. அவர் 1991 இல் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றார் மற்றும் 2012 இல் ஓய்வு பெறும் வரை டாடா குழுமத்தை வழிநடத்தினார். அவரது பதவிக் காலத்தில், மூத்த தொழிலதிபர் 1996 இல் டாடா டெலிசர்வீசஸை நிறுவினார், இது குழுவின் தொலைத்தொடர்பு விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது.

டாடா குழுமத்தை உலகளாவிய அதிகார மையமாக மாற்றினார்

டாடா சன்ஸ் நிறுவனத்தில் அவர் தலைமை வகித்த காலத்தில், டெட்லி, கோரஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற நிறுவனங்களை வாங்குவதன் மூலம் டாடா குழுமத்தை முதன்மையாக உள்நாட்டு நிறுவனமாக இருந்து உலகளாவிய அதிகார மையமாக மாற்றினார். 

$100 பில்லியன் மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யமாக டாடா வளர்ந்தது

அவரது தலைமையின் கீழ், டாடா $100 பில்லியன் மதிப்புள்ள உலகளாவிய வணிக சாம்ராஜ்யமாக வளர்ந்தது. டிசம்பர் 2012 இல், ரத்தன் டாடா தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News