ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் ஏழைகளின் நலனை அரசு செய்து, அவர்களின் நலன் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், நாட்டில் எந்த ஒரு குடிமகனும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காகவும், அவர் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உணவு தானியங்களைப் பெறுவதற்கும் அரசாங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில், அரசால் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு மூலம் ஏழைகளுக்கு இலவச ரேஷன் அல்லது குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை அரசு வழங்குகிறது. இருப்பினும், சில நேரங்களில் மக்கள் ரேஷன் பெறுவதில் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேஷன் கொடுக்க மறுப்பு
பல முறை ரேஷன் கார்டு இருந்தும் ரேஷன் டீலர்கள் ரேஷன் கார்டுதாரருக்கு ரேஷன் பொருட்களை வழங்க மறுக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனினும், இதற்கான உறுதியான ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. அந்தவகையில் ரேஷன் வழங்க மறுத்தால், ரேஷன் டீலர்கள் மீது இனி நீங்கள் புகார் அளிக்கலாம்.


மேலும் படிக்க | UPI மூலம் பணம் செலுத்தும் போது இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!


ரேஷன் வழங்க மறுத்தால், ரேஷன் டீலர்கள் மீது புகார் அளிக்கலாம்
ரேஷன் கார்டு இருந்தும் தகுதியானவர்களுக்கு ரேஷன் கிடைக்கவில்லை என்றால், ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம். அதேபோல் மாநிலத்தின் அந்தந்த இணையதளத்திற்குச் சென்று மின்னஞ்சல் மூலமாகவும் புகார் அளிக்கலாம். நீங்கள் புகார் செய்யும் போதெல்லாம், ரேஷன் கார்டு எண்ணுடன், ரேஷன் டிப்போ பற்றிய தகவலையும் தெரிவிக்க வேண்டும்.



புகார் செய்ய பல வழிகள் உள்ளன
இது தவிர, அந்தந்த மாநில அரசுகளுக்கு தனி மின்னஞ்சல் ஐடிகளும் இருக்கும். அதன்படி மின்னஞ்சல் முகவரியின் உதவியுடன் ரேஷன் கிடைக்கவில்லை என நீங்கள் புகார் செய்யலாம். அதே நேரத்தில், ரேஷன் கார்டு தொடர்பான அரசின் இணையதளத்தைப் பார்வையிட்டு, கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.


தமிழகத்தில் எப்படி புகார் செய்வது
கார் அளிப்பதற்காக ஹெல்ப்லைன் நம்பர்கள் அதாவது இலவச உதவி மைய எண்களை அரசு வழங்கியுள்ளது. இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. தமிழகத்தில் ரேஷன் தொடர்பான புகார்களை 1800 425 5901 என்ற எண்ணுக்கு தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம். அதேபோல் ஆன்லைனிலும் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம். www.tnpds.gov.in என்ற உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உதவி மைய எண் 1800 425 5901 தொடர்புக்கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ