ரேஷன் கடையில் ரேஷன் கார்டு மூலம் ரேஷன் பொருட்களை நாம் பெறுகிறோம். ஆனால் இந்த அட்டை தொலைந்துவிட்டால், ரேஷன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இப்பிரச்னையை கருத்தில் கொண்டு, உணவுத்துறை புதிய வசதியை துவக்கியது. இந்த வசதியின் கீழ், தொலைந்து போன ரேஷன் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே இப்போது நீங்கள் ரேஷன் கார்டைப் பெற அரசு அலுவலகத்திற்குச் செல்லத் தேவையில்லை. இதற்கான வலைத்தளத்திற்கு சென்று, கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ரேஷன் கார்டைப் சுலாமாக பெறலாம்.
ரேஷன் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி:
* தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கமான https://www.tnpds.gov.in/ பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
* அதில், பயனாளர் நுழைவு என்னும் டேப்பை கிளிக் செய்ய வேண்டும்.
* அதன் உள் சென்றதும் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் .
* அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி உள்ளிடவும்.
* தற்போது ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்யும் டேப்ஐ காணமுடியும். அதன் உள்ளே சென்று ‘ ஸ்மார்ட் கார்டு பிரிண்ட்' என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* பின் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
* பின்னர் சேவ் என கொடுத்தால் பிடிஎஃப் வடிவதில் உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டை பதவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு கீழ் கண்ட உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஹெல்ப்லைன் எண்களை 1967 & 1800 425 5901 ஐ தொடர்பு கொள்ளலாம். |
ஆஃப்லைன் முறையில் பெறுவதற்கான வழிமுறைகள்:
* முதலில் மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
* இதையடுத்து குடும்ப உறுப்பினர்களின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை சமர்ப்பிக்கவும்.
* அதில் ரேஷன் கார்டு எண், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் கார்டை, குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று உள்ளிட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டும்.
* இறுதியாக நகல் ரேஷன் கார்டு பெறுவதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின் அத்துடன் அபராதக் கட்டணத்தின் இரண்டு ரசீதுகளையும் இணைத்து சமர்ப்பிக்கவும்.
மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: இந்த தேதியில் இருந்து அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ