Ration Card: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாஸ் நியூஸ்; புதிய விதிமுறை அமல்
Ration Card Update: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் ரேஷன் கடைகளில் மின்னணு பாயின்ட் ஆப் சேல் கருவிகளை மின்னணு தராசில் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கார்டின் கீழ் உணவு தானியங்களை வாங்கி வருபவர்களுக்கு நிம்மதியான செய்தி. ஒருபுறம், அரசு இலவச ரேஷன் வழங்கும் காலத்தை டிசம்பர் வரை நீட்டித்துள்ளது. மறுபுறம் மோடி அரசாங்கத்தின் லட்சியமான ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது, அதன் பிறகு அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் சாதனம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசின் இந்த முடிவின் விளைவும் தற்போது தெரிகிறது என்பது மிக முக்கியமான விஷயமாகும். எப்படி என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
இனி ரேஷன் எடையில் குளறுபடி இருக்காது
உண்மையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் ரேஷன் கடைகளில் மின்னணு பாயின்ட் ஆப் சேல் கருவிகளை மின்னணு தராசில் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க | பான் கார்டு & பே ஸ்லிப் இல்லாமல் தனிநபர் கடன் பெறுவது எப்படி?
நாடு முழுவதும் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது
தற்போது நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் அதாவது பிஓஎஸ் சாதனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்த செயல் முறை காரணத்தால் ரேஷன் எடையில் இனி எவ்வித குளறுபடி நடக்காது. பொது விநியோகத் திட்டத்தின் பயனாளிகள் எந்தச் சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் பெறக்கூடாது என்பதற்காக ரேஷன் டீலர்களுக்கு ஹைப்ரிட் மாடல் விற்பனைப் புள்ளி இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் ஆன்லைன் பயன்முறையிலும், நெட்வொர்க் இல்லாவிட்டால் ஆஃப்லைனிலும் இயங்கும். எனவே இனி பயனாளி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள எந்த நியாய விலைக் கடையிலிருந்தும் தனது டிஜிட்டல் ரேஷன் கார்டைப் பயன்படுத்தி வாங்கலாம்.
பொங்கல் பரிசு: ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 ரொக்கம்
இதற்கிடையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது பற்றி தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், ரொக்கமாக ரூ.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ