பான் கார்டு & பே ஸ்லிப் இல்லாமல் தனிநபர் கடன் பெறுவது எப்படி?

தனிநபர் கடன் பெறுவதற்கு முக்கியமாக வரி செலுத்துபவரின் நிதித் தகவலை கொண்ட முக்கியமான ஆவணமான பான் கார்டு மற்றும் சம்பள சான்று தேவைப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 8, 2022, 06:33 AM IST
  • தனிநபர் கடன்கள் பெறுவது அவ்வளவு எளிதல்ல.
  • தனிநபர் கடன் பெறுவதற்கு பான் கார்டு தேவைப்படுகிறது.
  • 700 மேல் சிபில் ஸ்கோர் இருந்தால் கடன் பெறுவது பற்றி கவலைப்பட தேவையில்லை.
பான் கார்டு & பே ஸ்லிப் இல்லாமல் தனிநபர் கடன் பெறுவது எப்படி?  title=

பொதுவாக வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ கடன்களை பெறுவதற்கு முதலில் தேவைப்படுவது நம்பகத்தன்மை, கடன் வழங்குபவர் நமது திருப்பி செலுத்தும் தகுதி போன்ற இதர தகுதிகளின் நம்பிக்கைதன்மையின் அடிப்படையிலே நமக்கு கடன்களை வழங்குகின்றனர்.  அதிலும் குறிப்பாக தனிநபர் கடன்கள் பெறுவது அவ்வளவு எளிதல்ல, பல ஆவணங்களை அடிப்படையாக வைத்து தான் கடன் வழங்கப்படுகிறது.  தனிநபர் கடன் பெறுவதற்கு உங்கள் சொத்துக்களை பிணையம் வைக்க தேவையில்லை, ஆனால் சில ஆவணங்களை சான்றாக கொடுக்க வேண்டும்.  தனிநபர் கடன்களை கொண்டு நீங்கள் சட்டபூர்வமான எந்தவொரு நிதி தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.  தனிநபர் கடன் பெறுவதற்கு முக்கியமாக வரி செலுத்துபவரின் நிதித் தகவலை கொண்ட முக்கியமான ஆவணமான பான் கார்டு மற்றும் சம்பள சான்று தேவைப்படுகிறது,  கூடுதலாக, டிஜிட்டல் முன்னேற்றங்களுடன் உங்கள் கேஒய்சி செயல்முறையை ஆன்லைனில் முடிக்க இந்த இரண்டு ஆவணங்களும் தேவை.  

மேலும் படிக்க | ஆதார் எண் இல்லாமலும் e-Aadhaar டவுன்லோட் செய்யலாம்: முழு செயல்முறை இதோ

மேலும், 2021 ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின்படி, டிமேட் கணக்கைத் திறப்பது மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் கடன்களைப் பெறுவது உள்ளிட்ட நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்ய உங்கள் பான் கார்டை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.  இருப்பினும் இந்தியாவில் பான் கார்டு மற்றும் சம்பளச் சான்று இல்லாமல் தனிநபர் கடன்களை பெறுவதற்கு சில வழிகள் இருக்கிறது, பான் கார்டு மற்றும் சம்பள சான்று இல்லாதவர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி தனிநபரை கடன்களை பெற்றுக்கொள்ளலாம்.

1) 700 மற்றும் அதற்கு மேல் உள்ள சிபில் ஸ்கோர் இருந்தால் கடன் பெறுவது பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை, சிபில் ஸ்கோர் மட்டும் இருந்தால் நீங்கள் பான் கார்டு அல்லது சம்பள சான்று போன்ற ஆவணங்களை கொடுக்க வேண்டியதில்லை, நல்ல சிபில் ஸ்கோர் உங்களது கடனுக்கான  தகுதியை உயர்த்தும்.

2) நீங்கள் நம்பகமானவர் என்பதை கடனை நீங்கள் திருப்பி செலுத்தும் தன்மை காட்டுகிறது, இதுவரை நீங்கள் கடன் பெற்றிருந்தால் அதனை உரிய தவணை காலத்திற்குள் செலுத்தியிருந்தீர்கள் என்றால் இந்த ஒரு தகுதியே கடன் நிறுவனங்கள் உங்களுக்கு கடன் வழங்க போதுமானது.

3) உங்கள் கடன் தகுதியை பூர்த்தி செய்ய உங்கள் நம்பகத்தன்மையை உங்களால் நிரூபிக்க முடியாவிட்டாலும், நீங்கள் சொத்து அல்லது பிற பாத்திரங்களை பிணையமாக வைத்தும் நீங்கள் கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

4) தேவையான ஆவணங்களை வைத்திருக்கும் மற்றும் உங்கள் தனிநபர் கடனுக்காக சாட்சி கையெழுத்து போட தயாராக இருக்கும் மற்றொரு நபரை நீங்கள் பெற முடிந்தால், அவரின் உதவியுடன் உங்களுக்கு கடன் கிடைக்கப்பெறலாம்.

5) நிதிநிலை அறிக்கைகள், பதிவுகள் மற்றும் கடந்தகால கடன் பதிவுகள் அனைத்தையும் கடன் வழங்கும் நிறுவனம் மதிப்பீடு செய்ய சமர்ப்பிக்க வேண்டும்.  இதனை மதிப்பீடு செய்து உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டால் கடன் வழங்குபவர் உங்களுக்கு கடன் வழங்குவார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News