அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தியை ராய்ட்டர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் பெரும் சரிவுக்குப் பிறகு, பங்குச் சந்தையில் அறிவித்திருந்த ரூ. 20 ஆயிரம் கோடிக்கான FPO-வை திரும்பப் பெறுவதாகவும், பணத்தை முதலீடு செய்திருந்த மக்களுக்கே அதனை திருப்பி வழங்குவதாகவும் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். மேலும்  தற்போதைய சூழலில் FPO-வை தொடருவது உகந்தது அல்ல என நிர்வாகக் குழு முடிவெடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | Income Tax New Slabs: வரி செலுத்துபவர் எவ்வளவு வரியை சேமிக்க முடியும்?


இதனிடையே அதானி நிறுவனம் செயற்கையாக பங்குகளின் விலையை உயர்த்தியதாக புகார் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்புகிறது.


அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன 
அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனங்கள் சரிவைக் கண்டு வருகின்றன. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 9.10 சதவீதம் சரிவைச் சந்தித்து வருகின்றன. அதானி கிரீன் எனர்ஜி 10 சதவீதமும், அதானி போர்ட் 3.19 சதவீதமும், அதானி பவர் 4.98 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் 10 சதவீதமும், அதானி டிரான்ஸ்மிஷன் 10 சதவீதமும், அதானி வில்மர் 4.99 சதவீதமும் குறைந்துள்ளன.


உலக பணக்காரர்கள் பட்டியலில் சரிவு
இந்த வார தொடக்கத்தில் உலகின் டாப் 3 பணக்காரர்களில் ஒருவராக இருந்த இந்தியாவின் கௌதம் அதானி, பங்குச்சந்தையில் ஏற்பட்ட தடாலடி வீழ்ச்சியின் காரணமாக, உலக மெகா கோடீஸ்வரர்கள் வரிசையில் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இந்த 5 கிரெடிட் கார்டு விவரங்களை தெரிஞ்சுக்கோங்க! அபராதங்கள் வராமல் தடுக்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ