RBI புதிய அதிரடி... கணக்கில் பணமே இல்லாமல் UPI மூலம் பணம் செலுத்தலாம்: எப்படி? இதோ செயல்முறை
RBI on UPI: யுபிஐ -இல் மற்றொரு பெரிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புது தில்லி: நம் நாடு மாறி வருகிறது. டிஜிட்டல் இந்தியாவின் பல்வேறு பயன்பாடுகள் நகரம், கிராமம் என்று அனைத்து இடங்களிலும் உள்ள மக்களுக்கு பயன்பட்டு வருகின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் மக்களின் அன்றாட செயல்பாடுகளை எளிதாக்குவதாகும். பெரிய அங்காடிகள் முதல், சிறிய கடைகள் வரை, தனியார் டேக்சி, கேப் முதல் ஆட்டோ-ரிக்ஷா வரை அனைத்து இடங்களிலும் சமீப காலங்காளில் புதிதாய் தோன்றியுள்ள ஒரு பொருள் உள்ளது. UPI, அதாவது யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் தான் அது. அனைத்து இடங்களிலும் இதற்கான க்யூஆர் கோட் (QR Code) ஸ்கேன் அட்டையை காண முடிகின்றது. கையில் 10 பைசா இல்லாமல், மொபைல் மட்டுமே வைத்துக்கொண்டு இன்று நம்மால் சந்தைக்கு சென்று பல வித பொருட்களை வாங்க முடியும். தற்போது இந்த யுபிஐ -இல் மற்றொரு பெரிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாட்டில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் அதாவது UPI மற்றும் நுகர்வோர் கடன் சந்தையின் பயன்பாட்டை அதிகரிக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இப்போது UPI அமைப்பில் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதியை, அதாவது ப்ரீ அப்ரூவ்ட் லோன் வசதியை சேர்க்கும் வசதியை வழங்கியுள்ளது. இனி முன் அனுமதி பெற்ற அல்லது முன் ஒப்புதல் பெற்ற கடன்கள் அல்லது கடன்களும் ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (UPI) அமைப்பில் சேர்க்கப்படுகின்றன என மத்திய வங்கி திங்களன்று கூறியது. இப்போது வரை, UPI -இல் டெபாசிட்கள் மூலம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரலில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸின் (யுபிஐ) செயல்பாட்டு நோக்கங்களை அதிகரிக்க முன்வந்தது. இதுவரை UPI அமைப்பு மூலம் நம் கணக்கில் உள்ள டெபாசிட், அதாவது நம் கணக்கில் உள்ள தொகையின் அளவிற்கே பரிவர்த்தனைகளை செய்ய முடியும். சேமிப்பு கணக்குகள், ஓவர் டிராஃப்ட் கணக்குகள், ப்ரீபெய்ட் வாலட்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை UPI உடன் இணைக்க முடியும். தற்போது ஆர்பிஐ அளித்துள்ள புதிய வசதியை நாம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என இந்த பதிவில் காணலாம்.
UPI முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் (UPI Pre approved loan) என்றால் என்ன? இதை எப்படி பயன்படுத்துவது?
வங்கிகளால் வழங்கப்படும் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் அதாவது ப்ரீ அப்ரூவ்ட் லோன் வசதியை UPI அமைப்பில் சேர்த்து, வாடிக்கையாளர்கள் அதிலிருந்து பெரும் பலனைப் பெறுவார்கள். இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் பணம் செலுத்த முடியும். நீங்கள் வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிப்பதை போல, இதற்கும் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் நிதி பதிவுகள் (Financial Records) சரிபார்க்கப்படும். இதில், உங்கள் வருமான வரலாறு, கடன் வரலாறு, திருப்பிச் செலுத்திய (ரீபேமண்ட்) வரலாறு, கிரெடிட் ஸ்கோர் போன்றவை சரிபார்க்கப்படும். இதற்குப் பிறகு, வங்கி உங்களுக்கு முன்-அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் லைனை வழங்கும், அதை நீங்கள் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | ஊழியர்கள் கவனத்திற்கு! EPFO கொண்டுவந்துள்ள புதிய நடைமுறை!
உதாரணமாக, ஒரு வாடிக்கையாளரிடம் ரூ.60,000 மதிப்பிலான யுபிஐ -இன் முன்-அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் லைன் இருந்தால், அவர்/அவள் அதை UPI பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான கடனாகப் பயன்படுத்தலாம். இது வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களை விரைவாகவும் வசதியாகவும் கட்ட உதவும்.
UPI பரிவர்த்தனை எண்ணிக்கை 10 பில்லியனைத் தாண்டியுள்ளது
UPI பரிவர்த்தனை எண்ணிக்கை 10 பில்லியனைத் தாண்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மொபைல் சாதனங்கள் மூலம் 24 மணி நேர உடனடி பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் UPI பரிவர்த்தனைகள் ஆகஸ்ட் மாதத்தில் 10 பில்லியனைத் தாண்டியது. ஜூலை மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 9.96 பில்லியனாக இருந்தது.
மேலும் படிக்க | வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதி அமைச்சர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ