RBI அசத்தல் அப்டேட்: இனி UPI, RTGS தேவை இருக்காது.. வருகிறது ஒரு புதிய சுலபமான சிஸ்டம்

RBI on LPSS: இந்த புதிய கட்டண முறை எந்த நிலையிலும் செயல்படும் திறன் கொண்டதாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 21, 2023, 11:29 AM IST
  • 'லைட் வெயிட் மற்றும் போர்ட்டபிள் பேமென்ட் சிஸ்டம்' (LPSS) பாரம்பரிய தொழில்நுட்பங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.
  • குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களால் எங்கிருந்து வேண்டுமானாலும் இதை இயக்க முடியும்.
  • இயற்கை சீற்றங்கள், போர் போன்ற பேரழிவு நிகழ்வுகளின் போதும் முக்கியமான பரிவர்த்தனைகளுக்கு இந்த அமைப்பு பயனுள்ளதாக இருக்கும்.
RBI அசத்தல் அப்டேட்: இனி UPI, RTGS தேவை இருக்காது.. வருகிறது ஒரு புதிய சுலபமான சிஸ்டம் title=

புது தில்லி: UPI, RTGS மற்றும் NEFT ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தயாராகி வருகிறது. இந்த புதிய கட்டண முறை எந்த நிலையிலும் செயல்படும் திறன் கொண்டதாக இருக்கும். அதாவது, இயற்கை சீற்றங்கள், போர் போன்ற பேரழிவு நிகழ்வுகளின் போதும் முக்கியமான பரிவர்த்தனைகளுக்கு இந்த அமைப்பு பயனுள்ளதாக இருக்கும்.

முன்மொழியப்பட்ட 'லைட் வெயிட் மற்றும் போர்ட்டபிள் பேமென்ட் சிஸ்டம்' (LPSS) பாரம்பரிய தொழில்நுட்பங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என மத்திய வங்கியின் அறிக்கை கூறியுள்ளது. மேலும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களால் எங்கிருந்து வேண்டுமானாலும் இதை இயக்க முடியும்.

இந்த கட்டண முறை ஏற்கனவே சேவையில் உள்ளது:

தற்போதுள்ள கட்டண முறைகளான RTGS (ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்), NEFT (தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்) மற்றும் UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) ஆகியவை பெரிய அளவில் பணம் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் சிக்கலான வயரிங் நெட்வொர்க்குகளை நம்பியுள்ளன. இயற்கை பேரிடர் மற்றும் போர் போன்ற பேரழிவு நிகழ்வுகளில், இந்த அமைப்புகளை தற்காலிகமாக மூடலாம் என ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

மிகக் குறைந்த ஊழியர்களுடன் செயல்படும்

"விபரீதமான எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகளுக்காக தயாராக இருப்பது விவேகமானது," என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து, ரிசர்வ் வங்கி (RBI),  LPSS -இன் செயல்பாட்டில் இறங்கியுள்ளது.  இது பாரம்பரிய நுட்பங்களை சாராமல் சுயாதீனமாக இருக்கும். மேலும் இதை  மிகக் குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்க முடியும். 

மேலும் படிக்க | ரூ.500 நோட்டு.. ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட்: வழிகாட்டுதல்கள் வெளிவந்தன

கூடுதல் தகவல்:

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பு

கடன் கணக்குகளில் அபராதம் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. கடன் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை மத்திய வங்கி தடை செய்துள்ளது. இதனுடன், அடுத்த ஆண்டு முதல் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதி அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். வணிகம், என்பிஎஃப் சி (NBFC), கூட்டுறவு வங்கி, வீட்டு நிதி நிறுவனம், நபார்டு, SIDBI போன்ற அனைத்து வங்கிகளுக்கும் புதிய விதிகள் பொருந்தும்.

ரிசர்வ் வங்கி விதிகளை வெளியிட்டது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) தங்கள் வருவாயை அதிகரிப்பதற்கான வழிமுறையாக 'அபராத வட்டி'யைப் பயன்படுத்தும் போக்கு குறித்து கவலை தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இது தொடர்பாக திருத்தப்பட்ட விதிகளை வெளியிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, வங்கிகளில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் கடனை செலுத்துவதில் தவறினால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு 'நியாயமான' அபராதக் கட்டணங்களை மட்டுமே வங்கிகள் இப்போது விதிக்க முடியும்.

புதிய விதிகள் ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும்

'நியாயமான கடன் நடைமுறைகள் - கடன் கணக்குகளுக்கான அபராதக் கட்டணம்' (Fair Lending Practices - Penal Fees on Loan Accounts) தொடர்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜனவரி 1, 2024 முதல் வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் அபராத வட்டி விதிக்க அனுமதிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | காசு மேல காசு வந்து கொட்டுற நேரமிது.. 10 ரூபாய் நோட்டுக்கு வந்த மவுசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News