RBI Update: டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போக்கு சந்தேகத்திற்கு இடமின்றி வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால் இப்போது பல்வேறு நோக்கங்களுக்காக பண பரிவர்த்தனை தேவைப்படும்போது, ​​மக்கள் ஏடிஎம் மூலம் பரிவர்த்தனை செய்கிறார்கள். ஏடிஎம் மிகவும் வசதியானது என்றாலும், சில நேரங்களில் அது வாடிக்கையாளர்களை சிக்கலில் ஆழ்த்துகிறது. பல முறை, ஏடிஎம் -மில் பணம் எடுக்கும்போது, பணம் வருவதில்லை. ஆனால் உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படுகின்றது. இது போன்ற ஒரு பிரச்சனை உங்களுக்கு நடந்தால், கவலைப்பட தேவையில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது போன்ற ஒரு சூழ்நிலையில் நீங்களும் சிக்கிக்கொண்டால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில முறைகளை முயற்சி செய்யலாம். இதன் மூலம் உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட்ட தொகை சில நாட்களுக்குள் உங்களுக்கு திருப்பித் தரப்படும். இதற்கான சில விதிகள் உள்ளன. இந்திய ரிசர்வ வங்கியால் (RBI) இந்த விதிகள் வகுக்கக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிகள்


ஏடிஎம்மில் (ATM) அனைத்து விவரங்களையும் சரியாக உள்ளீடு செய்த பிறகும், பணத்தை எடுக்க முடியாமல், கணக்கில் இருந்து மட்டும் மீதித்தொகை கழிக்கப்பட்டால், ஏடிஎம்மில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு அதற்கு காரணமாக இருக்கலாம். பல முறை ஏடிஎம் இயந்திரத்தில் பணம் சிக்கிக்கொள்கிறது. அதனால் இது வாடிக்கையாளருக்கு கிடைப்பதில்லை ஆனால், வங்கிக்கணக்கில் இது கழிக்கபப்டுகின்றது. இந்தப் பணத்தைத் திரும்பத் தர, வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 5 நாட்கள் + பரிவர்த்தனை நாள் வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. விதிகளின்படி, அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் வாடிக்கையாளரின் கணக்கில் திரும்பச் செலுத்த வேண்டும். இது நடக்கவில்லை என்றால், வங்கி ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளருக்கு ரூ.100 அபராதம் செலுத்தும்.


மேலும் படிக்க | சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன் வாங்க மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கீடு! பின்னணியும் காரணமும்


நீங்கள் செய்ய வேண்டியது என்ன?


- ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, இது போன்ற ஒரு சிக்கல் உங்களுக்கு நேர்ந்தால், முதலில் நீங்கள் உங்கள் வங்கியின் அருகிலுள்ள கிளைக்குச் சென்று அதைப் பற்றி சொல்ல வேண்டும். 


- நீங்கள் விரும்பினால், வாடிக்கையாளர் சேவையை அழைத்து (கஸ்டமர் கேர்) இது குறித்து வங்கிக்கும் தெரிவிக்கலாம். 


- இதற்குப் பிறகு, உங்கள் புகார் பதிவு செய்யப்படும், அதன் பின்னர் வங்கி இந்த விஷயத்தை விசாரிக்கும்.


- உங்கள் புகார் உண்மையாக இருந்தால், 5 முதல் 6 நாட்களுக்குள் உங்கள் கணக்கில் பணம் திரும்பப் பெறப்படும். 


- ஆனால் இதற்கிடையில், உங்கள் ஏடிஎம் சீட்டையும் உங்கள் மொபைலில் வந்த செய்தியையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 


- ஏடிஎம் பரிவர்த்தனைக்கான ஆதாரமாக இதைப் பயன்படுத்தலாம்.


- வங்கியில் புகார் அளித்து 30 நாட்களுக்குள் உங்கள் கணக்கில் பணம் திரும்ப வரவில்லை என்றால், குறை தீர்க்கும் துறையின் மூத்த அதிகாரியிடம் புகார் செய்யலாம்.


கூடுதல் தகவல்


கடந்த சில காலங்களில் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உதாரணமாக, கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கும் பலருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தற்போது ரிசர்வ் வங்கி (RBI) சில விதிகளை வகுத்துள்ளது. அந்த வகையில் கடன் வாங்குபவர்களுக்கு கடன் மறுசீரமைப்பு (Loan Restructuring) ஒரு சிறந்த வழியாக இருக்கும். இது, கடனை உரிய நேரத்தில் செலுத்தாத நபர்கள் மீதிருந்து டீஃபால்டர், அதாவது, கடனை திருப்பி செலுத்தாதவர் என்ற அடையாளத்தை அகற்றும். கடன் வாங்கிய ஒரு நபர் டீஃபால்டராக மாறினால், அவரது கடன் வரலாறு (Credit History) மோசமடைகிறது. இது மட்டுமின்றி இது அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கின்றது. இதன் காரணமாக, அவரது CIBIL ஸ்கோரும் கெட்டுவிடுகிறது. இதனால், எதிர்காலத்தில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் போய் விடுகின்றது, அல்லது சிக்கலுக்கு உள்ளாகிறது. இந்த பிரச்சனைகள்ளுக்கு ரிசர்வ் வங்கியின் லோன் ரீஸ்ட்ரக்சரிங் விதி பெரிய நிவாரணம் அளிக்கின்றது. 


மேலும் படிக்க | போன் கால் கூடாது, அச்சுறுத்த கூடாது....ஏஜெண்டுகளை அடக்கி வைக்கவும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ